| இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய் | | | ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய் | | | கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய் | | | கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே. | 3 |
| 2893. | மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய் | | | மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய் | | | புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய் | | | பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய் | | | அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய் | | | ஐயா றகலாத ஐயன் கண்டாய் | | | குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய் | | | கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே. | 4 |
தந்து நின்றவனாய், இலைபோன்ற திரிசூலப்படையினனாய், ஏழுலகுமாய் வியாபித்த எந்தையாய், கொலைத் தொழிலிற் பழகிய யானையது தோலைப் போர்த்துக் கொண்டவனாய் விளங்குவான் ஆவான். கு-ரை: அலைஆர்ந்த - அலைகள் நிறைந்த, "கங்கை" பெயர். மலை ஆர்ந்த -மலையிற் பொருந்திய: தோன்றி வளர்ந்த. அணி - அணிகலம். இலை ஆர்ந்த -இலைபோலப் பொருந்திய. கொலை. ஆர்ந்த குஞ்சரம் - கொல்லுதல் பொருந்தியயானை. 4. பொ-ரை:திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனே தனக்கு ஒப்பார் யாரும் இலனாய், மயிலாடுதுறையைத் தனக்குப் பொருந்திய இடமாகக் கொண்டு மகிழ்ந்தவனாய், புற்றில் வாழ் அரவுகளை அணிந்த புனிதனாய், பூந்துருத்தியில் பொய்யிலியாய், பற்றற்ற அடியார்க்கு மறைதலின்றி வெளிப்பட்டு நிற்பானாய், ஐயாறு அகலாத ஐயனாய், குற்றாலத்து விரும்பி உறையுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான். கு-ரை: "மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான்" என்பது முதற்றிருப் பதிகத்தே கூறப்பட்டது. மயிலாடுதுறை, பூந்துருத்தி, ஐயாறு - இவை சோழநாட்டுத் தலங்கள். குற்றாலம், பாண்டிநாட்டுத் தலம். பூந்துருத்திப் பெருமானை, சுவாமிகள்யாண்டும், "பொய்யிலி' என்றே அருளுதல்
|