| 2894. | வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் | | | மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் | | | போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய் | | | புகலூரை அகலாத புனிதன் கண்டாய் | | | நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய் | | | நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய் | | | கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய் | | | கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே. | 5 |
| 2895. | கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய் | | | கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய் | | | படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய் | | | பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் | |
காணப்படும். அற்றார்கட்கு அற்றான் - மற்றுப்பற்றுச் சிறிதும் இலராய் நீங்கியவர்கட்கு, மறைந்து நிற்கும் தன்மை சிறிதும் இன்றி நிற்பவன்; இடையீடில்லாத அனுபவப் பொருளாய் நிற்பவன் என்றபடி. "அற்றவர்க் கற்றசிவன்" (தி.3. ப.120. பா.2) என ஆளுடைய பிள்ளையாரும் அருளினார். 5. பொ-ரை:திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அடிகளே கச்சுப் பொருந்திய அழகிய முலையாளின் பங்கனாய், மாற்பேற்றைத் தனக்குரிய இடமாகக் கொண்டு மகிழ்ந்தானாய், போர்ச் செயலில் பழகிய பெரிய விடை ஒன்றை ஊர்தியாக உடையானாய், புகலூரை நீங்காத புனிதனாய், கங்கைபொருந்திய நீண்ட ஒப்பற்ற சடையை உடையானாய், நினைக்கும் அடியாருடைய வினைச்சுமையை இறக்கிவைப்பானாய், கூர்மை பொருந்திய மூவிலை வேற்படையை உடையானாய் விளங்குவான் ஆவான். கு-ரை: வார் ஆர்ந்த - கச்சுப் பொருந்திய. மாற்பேறு, தொண்டை நாட்டுத் தலம்.காப்பு - இடம். புகலூர் - சோழநாட்டுத் தலம். "சடை" என்றதனை, 'சடைமுடி'எனக் கொள்க. இழிப்பான் - இறக்குவான். 6. பொ-ரை:திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே! மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையனாய், கண்ணை அப்பிய செயற்கு விண்ணைப் பொருந்துதலை ஈடாகக் கொடுத்தானாய்,
|