பக்கம் எண் :

1154
 
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்

அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்

கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்

கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

6

2896.உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்

ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்

கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்

காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்

இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்

என்நெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்

குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்

கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

7


உலகில் நிறைந்த பல பிறவிகளிலும் பிறத்தலை அறுப்பானாய், பற்றற்ற அடியார்க்குத் துணை நின்றானாய், திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு ஒலிப்பத் திரிவானாய், தேவர் கூட்டம் வணங்கிப் பரவும் தலைவனாய், மிகுதியான கொடிகள் கட்டப்பட்ட மதில்களையுடைய தில்லையில் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.

கு-ரை: கடி மலிந்த - மணம் நிறைந்த. கண் அப்பினார் கண்ணப்ப நாயனார் என்பது வெளிப்படையாகலின் அஃது அருளாராயினார். விண் அப்பு - வானத்திற் பொருந்துதல். படி மலிந்த - உலகில் நிறைந்த. பற்று - துணை. 'பற்றவன்' என்பதில் அகரம், சாரியை. அலம்ப - ஒலிக்க. 'திரிதல், பலிக்கு' என்க.

7. பொ-ரை:திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, மான்கன்று பொருந்திய தொருகரதலத்தனாய், ஒற்றியூரைப் பொருந்தி நிற்கும் இடமாக உடையானாய், மூங்கிலசையும் கழுக்குன்றில் அமர்ந்தானாய், காளத்திக்கண் திகழும்கற்பகமாய், பூணூல் கிடந்தசையும் தோள்கள் எட்டுடைய இறைவனாய், என்நெஞ்சைவிட்டு நீங்கா எந்தலைவனாய், காதணி ஆட நடன மாடுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.

கு-ரை: உழை ஆடு கரதலம் - மான் பொருந்தியகை. ஒற்றியூர், கழுக்குன்றம், காளத்திஇவை தொண்டை நாட்டுத் தலங்கள். ஒற்றியா உடையான் - ஒற்றித்து (பொருந்தி)நிற்கும் இடமாக உடையவன்.