பக்கம் எண் :

1155
 
2897.படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்

பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்

நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய்

நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்

கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்

கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்

குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்

கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

8

****************************************

9, 10

திருச்சிற்றபலம்


கழை - மூங்கில். இழை - பூணநூல். குழை ஆட - காதில் உள்ள குண்டலம் அசைய.

8. பொ-ரை:திருக்கோடிகாவில் விரும்புயுறையும் அழகனே படமெடுத்தாடும் பாம்பினைக் கச்சாகக் கட்டியவனாய், பராய்த் துறையிலும் பாசூரிலும் பொருந்தியவனாய், ஏழுலகுஞ் சென்று ஆங்காங்கே நடனமாடுவானாய், நான் மறையின் பொருளினனாய், எல்லார்க்கும் தலைவனாய் (நாததத்துவனாய்) மதநீர் ஒழுகுங் களிற்றினை உரித்த வீரனாய், கயிலை மலையில் விரும்பி உறைவானாய், குடமாடியாம் திருமாலை இடப்பாகமாகக் கொண்டானாய் விளங்குவான் ஆவான்.

கு-ரை: பன்னகம் - பாம்பு, 'படமாடு பன்னகம்' எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது. அசைத்தான் - கட்டினான். பராய்த்துறை, சோழநாட்டுத்தலம். பாசூர், தொண்டை நாட்டுத் தலம். ஏழுலகிலும் சென்று நடனமாடுதல், அதனை ஆங்கு உள்ளவர்கள் கண்டு உய்தற் பொருட்டு என்க. நாதன் - தலைவன்; 'நாததத்துவத்தில் உள்ளவன்' என்றுமாம். கடம் ஆடு - மதநீர் ஒழுகுகின்ற. குடம் -திருமால் ஆடிய ஒருவகைக் கூத்து. அதனால், "குடம் ஆடி" என்றது திருமாலின பெயராயிற்று. சிவபிரான் திருமாலை இடப்பாகத்திற் கொண்டவாற்றை மேலே(ப.76. பா.1.) காண்க.

9, 10: ****************************************

குறிப்பு: இத்திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்கள் கிடைத்தில.