பக்கம் எண் :

1159
 
கானுற்ற ஆட லமர்ந்தார் போலும்

காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்

தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்

திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

4

2902.கார்மல்கு கொன்றையந் தாரார் போலும்

காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்

பார்மல்கி யேத்தப் படுவார் போலும்

பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்

ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்

ஓத்தூ ரொருநாளும் நீங்கார் போலும்

சீர்மல்கு பாட லுகந்தார் போலும்

திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

5


இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும், பல ஊழிகளைக் கண்டவரும், மான் பொருந்திய கரதலம் ஒன்றுடைய வரும், திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும், காட்டில் ஆடலை விரும்பியவரும், காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார்.

கு-ரை: மறைக்காட்டுக் கோடி - திருமறைக் காட்டை அணுகியுள்ள, 'கோடிக் குழகர்' என்னும் தலம். கான் உற்ற ஆடல் - காட்டில் பொருந்திய நடனம். அமர்ந்தார் -விரும்பினார்.

5. பொ-ரை:திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப்பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும், காலனை ஓருதையால் வீழக்கண்டவரும், நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும், திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும், மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும், ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும், தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார்.

கு-ரை: கார் மல்கு - கார் காலத்தில் நிரம்பப் பூக்கின்ற, வீழக் கண்டார்' என ஒரு சொல் வருவித்துக்கொள்க. பார் - பூமியில் உள்ளார்; இடவாகுபெயர். மல்கி -நிறைந்து நின்று. பருப்பதம் - திருப்பருப்பதம்;