| 2904. | கடுவெளியோ டோரைந்து மானார் போலுங் | | | காரோணத் தென்று மிருப்பார் போலும் | | | இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும் | | | ஏகம்பம் மேவி யிருந்தார் போலும் | | | படியொருவ ரில்லாப் படியார் போலும் | | | பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலும் | | | செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலும் | | | திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 7 |
| 2905. | விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும் | | | வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும் | | | மலையினார் மங்கை மணாளர் போலும் | | | மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் | |
7. பொ-ரை: திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும், காரோணத்தலங்களில் என்றும் இருப்பவரும், இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும், ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும், பாண்டிக்கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார். கு-ரை: கடுவெளி - பெரிய ஆகாயம். "கடுவெளியோடு ஓர் ஐந்தும் ஆனார்" என்றது, 'கடுவெளி ஆனமையே யன்றி ஓர் ஐந்தும் ஆனார்' என்றபடி. ஐந்து, பூதங்கள். காரோணம்பற்றி மேலே (ப.2. பா.6) கூறப்பட்டது. இடிகுரல் - இடிக்குங்குரல். படி -ஒப்பும், இயல்பும். 'ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவர்' என்க. 'ஒருவரும்' என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. பாண்டிக்கொடுமுடி, கொங்குநாட்டுத் தலம். "கொடுமுடியும் தம் ஊர்" என்றருளினாராயினும், 'கொடுமுடியையும் தம் ஊராக் கொண்டார்' என்றலே திருவுள்ளமாகக் கொள்க. செடி- துன்பம். படு - உண்டாதற்குக் காரணமான. நோய் - பிணி. வினையைக் குறித்தருளியதுமாம். 'அடியாரை நோய் தீர்ப்பார்' என்றதனை, 'நூலைக் குற்றங்களைந்தார்' என்பது போலக் கொள்க. 8. பொ-ரை: திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விலையில்லாத மாலையணிந்தமார்பரும், வெண்ணீற்றை மெய்யிற் பூசிய
|