| தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலும் | | | சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலும் | | | சிலையினார் செங்க ணரவர் போலும் | | | திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 8 |
| 2906. | அல்லல் அடியார்க் கறுப்பார் போலும் | | | அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும் | | | நல்லமும் நல்லூரும் மேயார் போலும் | | | நள்ளாறு நாளும் பிரியார் போலும் | | | முல்லை முகைநகையாள் பாகர் போலும் | | | முன்னமே தோன்றி முளைத்தார் போலும் | | | தில்லை நடமாடுந் தேவர் போலும் | | | திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 9 |
விகிர்தரும், (மற்றையாரின் வேறுபட்டவர்) மலையரையன் மங்கையின் மணாளரும், மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும், தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும், சோற்றுத்துறை, துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும், வில்லில் நாணாகப்பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார். கு-ரை: "விலை இலா ஆரம்" என்றது, எலும்பு மாலையை; இது, 'விலை ஒன்றும் பெறாதமாலை' என்னும் பொருளதாய், 'விலை வரம்பிலா மாலை' எனப் பிறிதொரு பொருளையும் உடன் உள்ளுறுத்து அருளிச் செய்யப்பட்டமையின், உடனிலை உள்ளுறை; இதனை, அணி இலக்கணங் கூறுவார், சிலேடை அணி என்ப. மலையின் ஆர் - மலையில் தோன்றி வளர்ந்த, மாற்பேறு. தொண்டை நாட்டுத்தலம். காப்பு - இடம். தொலைவு - தோற்றல். தொலைத்தார் - அழித்தார். சோற்றுத் துறையும், துருத்தியும் சோழநாட்டுத் தலங்கள். சிலையின் ஆர் அரவர் - வில்லில்நாணாகப் பூட்டிய பாம்பினையுடையவர். 9. பொ-ரை:திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, அடியாருடைய அல்லலை அறுப்பவரும், தம்மை அடைந்தார்க்கு அமருலக
|