| 2907. | உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால் | | | ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச | | | நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும் | | | நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும் | | | பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும் | | | பெண்ணா ணுருவாகி நின்றார் போலும் | | | சிறப்புடைய அடியார்கட் கினியார் போலும் | | | திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 10 |
திருச்சிற்றம்பலம்
ஆட்சியை அளிப்பவரும், நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்றுகாட்சி அளிப்பவரும், நள்ளாற்றை என்றும் பிரியாதவரும், முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும், உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும், தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார். கு-ரை: 'அடியார்க்கு அல்லல் அறுப்பார்' என்க. 'அமருலகம் ஆட்சி' என்றருளினாராயினும், 'ஆட்சியாக அளிப்பார், என்றலே கருத்தாகக் கொள்க. நல்லமும், நல்லூரும், நள்ளாறும் சோழநாட்டுத் தலங்கள்; 'அவற்றுள் நல்லூர், சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டிய தலம்' என்பது மேலும் கூறப்பட்டது. 10. பொ-ரை: திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே! எடுத்த வினையை முடிப்பதில்தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும், உமையாள் அஞ்ச, வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும், பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும், பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும், பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனியவரும் ஆவார். கு-ரை: உறைப்பு - கொண்டது விடாமை. பொன் - அழகு.
|