ஊக்கம் செய்து - ஊக்கங்கொண்டு எழுந்து. அஞ்ச - அஞ்சியதனால், 'அவனதுதோள் இருபதும் முடிகள் பத்தும் நிலத்திற் புதைய' என்க. விரல், 'கால் விரல்'என்பது, சொல்லுவாரது குறிப்பாற் கொள்ளக் கிடந்தது. பிறைப் பிளவு - பிறையாகிய பிளவு என்றது, சந்திரனது பிளவு என்றவாறு. சிறப்பு - வீட்டு நெறி; திருவடி ஞானம். திருநாவுக்கரசர் புராணம்
| | ஆண்டவர செழுந்தருளக் கோலக் காவை | யவரோடுஞ் சென்றிறைஞ்சி யன்பு கொண்டு | | மீண்டருளி னாரவரும் விடைகொண் டிப்பால் | வேதநா யகர்விரும்பும் பதிக ளான | | நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர் | நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூருங் | | காண்டகைய நனிபள்ளி முதலா நண்ணிக் | கண்ணுதலார் கழறொழுது கலந்து செல்வார்.
| | மண்முதலா முலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப் | புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே னெனப்புகன்று | | நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி | யண்ணலார் சேவடிக்கீ ழாண்டவர செய்தினார். | -தி.12 சேக்கிழார். |
|