பக்கம் எண் :

1165
 

83. திருப்பாசூர்

பதிக வரலாறு:

நாவுக்கரசர், திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானைத் தொழுது அங்குள்ள சிவாலயங்களை வணங்கி மீண்டும் திருவொற்றியூர் தொழுது பாசூரிறைவரைப்பணிந்து பாடியருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12திருநாவு. புரா. 340)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவனைத் திருப்பாசூரிற் கண்டு வணங்கிப் பெற்றபேரின்ப மேலீட்டில், அவன் பெருமைகளைப் பலவாறாக எடுத்துப் புகழ்ந்துஅருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 296

பதிக எண்: 83

திருச்சிற்றம்பலம்

2908.விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி

வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற

எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி

ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற

கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்

காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற

பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

1


1. பொ-ரை: பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை மேகமாகவும், நிலனாகவும், ஆகாயமாகவும்,கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணாகவும், எழுத்தாகவும், தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும், ஏழுலகத்தாரும் வணங்கித்துதித்துக் காணுதற்கமைந்த கண்ணாகவும் அக்கண்ணுள் மணியாகவும் அதனால் காணப்படுகின்ற காட்சியாகவும், அடியார்கள் விரும்பித் துதித்தற்குரிய பண் நிறைந்த பாடலாகவும், இன்னமுது ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.

கு-ரை: விசும்பு - மேகம். வேலை - கடல். "விரும்புகின்ற" என்றது, எண் எழுத்து இரண்டனையும் என்க. "இயல்பு" என்றது, பண்பாகு பெயராய்ப் பல இயல்புகளையுடைய பல பொருள்களையும் உணர்த்தி நின்றது; உம்மை.