| 2909. | வேதமோர் நான்காய்ஆ றங்க மாகி | | | விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக் | | | கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக் | | | குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக் | | | காதலால் வானவர்கள் போற்றி யென்று | | | கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்ற | | | பாதியோர் மாதினனைப் பாசூர் மேய | | | பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 2 |
| 2910. | தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த் | | | தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக் | | | கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக் | | | காண்கின்ற கதிரவனும் கதியு மாகிக் | |
எச்சம். மணி - கண்ணின் மணி. காட்சி - காணுதற்றொழில். "கண்ணாகி" என்பது மூன்றிலும் உள்ள, "ஆகி" என்பன உவமை குறித்து நின்றன; உவமைகள், சிறப்பு நிலைக்களனாகத் தோன்றின என்க. "பண்" என்றது, முன்னர்ப் பாடலையும், பின்னர் அதன் பொருளையும் குறித்து நின்ற இருமடியாகு பெயர்." இன்னமுதாம்" என்றதும் உவமையே யாம்; இவ்வுவமை பண்பும் பயனும் பற்றிவந்தது என்க. 'அடியேன் உய்ந்தவாறு நன்று' எனச் சொல்லெச்சம் வருவித்துமுடிக்க. 2. பொ-ரை: பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை நான்கு வேதங்கள் ஆகவும், அங்கங்கள் ஆறுஆகவும், பெருகிவளர்கின்ற பொருள்களுக்கெல்லாம் அடியான வித்து ஆகவும்,விடாது தூற்றம் சிறு திவலைகளைப் பொழியும் மாரியாகவும், உலகங்கள் யாவும் ஆகவும், கீழ்க்காற்று ஆகவும், அன்பு மேலீட்டால் தேவர்கள் 'போற்றி' என்று உரைத்து மணமலர்களைத் தூவித் தோத்திரிக்க நின்ற மாதொருபாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று. கு-ரை: விரிகின்ற - தோன்றுகின்ற. "விரிக்கின்ற" என்பதும் பாடம். கூதல் -விடாது தூற்றும் சிறுதுவலை; இதனை, 'சோனை' என்ப. கொண்டல் - கீழ்க் காற்று; இதுவே, மழையைக் கொணர்வது என்பர். கடி - நறுமணம். 3. பொ-ரை: பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை பெரிய ஏழு குலமலைகள் ஆகவும், காற்றாகவும்,தீ ஆகவும், குளிர்ந்த விசும்பாகவும்,
|