| 2914. | இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார் | | | இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார் | | | அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர் | | | அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர் | | | தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித் | | | தத்துவனைச் சாந்தகிலின் அளறு தோய்ந்த | | | பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய | | | பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 7 |
| 2915. | அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி | | | அதிர்த்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம் | | | எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு | | | இமைப்பளவி லுண்டிருண்ட கண்டர் தொண்டர் | |
7. பொ-ரை: பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரைத் தமக்குத் தாம் அல்லால் இணையாவார் ஒருவரும் இல்லார் ஆகவும், இடை மருது, ஏகம்பம் என்றிவற்றை என்றும் நீங்காதார் ஆகவும், யாவர்க்கும் அணைவதற்கு அரியார் ஆகவும், ஆதி தேவர் ஆகவும், அடியார்க்கு அரிய அமுதம் போன்ற நல்லன எல்லாம் ஈவார் ஆகவும், நெருப்பில் மூழ்கினமையால் உண்டான சாம்பற்பூச்சைக் கொண்ட செவ்வானன்னமேனித் தத்துவன் ஆகவும், சந்தனம் அகில் ஆகியவற்றின் சேறு தோயப்பெற்றபருத்த தனத்தினையுடைய பார்வதியின் பாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று. கு-ரை: 'தமக்குத் தாம் அல்லால் இணை யார் ஒருவரும் இல்லார்' என்க. இடை மருது -திருவிடைமருதூர். ஏகம்பம் - கச்சி ஏகம்பம் 'யாவர்க்கும் அணைவரியர்' என்க. அணைதல் - சார்தல். ஆதி தேவர் - முதற்கடவுள். 'அருமருந்தன்ன' என்பது, 'அருமருந்த' என மருவிற்று; 'அரிய அமுதம் போன்ற' என்பது பொருள். தணல் முழுகுபொடி - நெருப்பில் மூழ்கினமையால் ஆகிய சாம்பல். நெருப்பில் மூழ்கியவை உலகனைத்தும் என்க. செக்கர் - சிவப்பு. சாந்து - சந்தனக் கட்டை; சந்தனக்கட்டையும், அகிற்கட்டையும் தேய்த்த அளறு என்றதாம். அளறு - சேறு; குழம்பு.'நீங்காரும், தேவரும், ஈபவருமாகிய பாகனை, பரஞ்சுடரை' என்க. 'பாகன்,பரஞ்சுடர்' என்பன, பன்மை யொருமை மயக்கம். 8. பொ-ரை: பாசூரிற் பொருந்திய எம் பரஞ்சுடரை மேலுலகத்தார் கடலைக் கடைய அதனிடத்து அனைவரையும் நடுங்கச்செய்து எழுந்த
|