பக்கம் எண் :

1172
 
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று

வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்

பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

8

2916.ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை

நான்முகனும் அறியாத நெறியார் கையிற்

சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்

தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்

காலத்தா லுதைசெய்து காதல் செய்த

அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்

பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

9


ஆலால நஞ்சு கடல் சூழ்ந்த உலகை எட்டுத் திசைகளிலும் சுடுகின்ற தன்மையைக்கண்டு இமைப்பளவில் அதனை உண்டு அதனால் கறுத்த கண்டர் ஆகவும், தேவர்களும் அசுரர்களும் வண்டுகள் மொய்க்கும் தேன் நிறைந்த மலர்களைத் தூவி நின்று வணங்கித் துதிக்கும் பண்டரங்கக் கூத்தனாம் வேடம் கொண்டவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.

கு-ரை: 'அண்டர்கள்' என்பது, அகரம் விரித்தலாய், "அண்டவர்கள்" என வந்தது. அதிர்த்து - (அனைவரையும்) நடுங்கச் செய்து, 'அதிர்ந்து என்பதும் பாடம். வேலைஞாலம் - கடலை உடைய உலகம். 'ஞாலத்தை எண்டிசையை சுடுகின்றவாற்றைக் கண்டு' என்க. 'ஞாலத்தை எண்டிசையைச் சுடுகின்ற' என்றதனை, 'யானையைக்கோட்டைக் குறைத்தான்' என்பது போலக் கொள்க. 'அதனை உண்டு' எனச் சுட்டு வருவித்து உரைக்க. "வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று" என்றதனை, 'தானவர்கள்' என்றதன் பின்னர்க் கூட்டுக' தானவர்கள் - அசுரர்கள்.

9. பொ-ரை: பாசூரிற்பொருந்திய பரஞ்சுடரை ஞாலத்தை உண்ட திருமாலும் நான்முகனும் அறியாத நிலையினை உடையவராகவும், அந்தகாசுரன் மடிய அவனைச் சூலத்தாற் குத்தியவர் ஆகவும், பழைய இவ்வுலகில் பல்லுயிரையும் கொல்லும் இயமனைக் காலால் உதைத்து உருட்டித் தன்பால் உண்மை அன்பு கொண்ட அந்தணனைக் கைக்கொண்டு