| 2917. | வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான் | | | மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோடிச் | | | சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத் | | | தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி | | | ஏந்துதிரள் திண்டோளுந் தலைகள் பத்தும் | | | இறுத்தவன்தன் இசைகேட்டு இரக்கங் கொண்ட | | | பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய | | | பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 10 |
திருச்சிற்றம்பலம்
காத்த செவ்வான் அன்னமேனி நிறத்தவர் ஆகவும், பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று. கு-ரை: நெறியார் - நிலையினையுடையவர். அந்தகன் - அந்தகாசுரன். சுருள - மடிய. 'காலதனால்' என்பது, "காலத்தால்" என மருவி நின்றது. காதல்செய்த அந்தணன், மார்க்கண்டேயர், கைக் கொண்ட - அடியாராக ஏற்றுக்கொண்ட. செவ்வான் - செவ்வானம். செவ்வானம் போலச் சிவந்த திருமேனியில், பால்போல வெளுத்துள்ள நீற்றினை அணிந்துள்ள அழகினை வியந்தருளியவாறு. 10. பொ-ரை: பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரை நெடிய முடியை அணிந்த அரக்கர்கோமானாகிய வேந்தன் விரைந்து ஓடிச் சந்தனம் ஒப்பத்திருநீற்றினைஅணிந்த தனது கயிலை மலையைப் பெரிய கைகளால் பெயர்த்திடவும் மெல்லியல் உமைவெருவ, அவ்வளவில், அவனுடைய வலிமை மிக்கு உயர்ந்து திரண்ட தோள்களும் பத்துத்தலைகளும் இறும் வண்ணம் தன் தாள் விரலை ஊன்றிப் பின் அவனது இசையைக் கேட்டு இரக்கங்கொண்டவன் ஆகவும் சடையாலாகிய முடியிடத்துப் பாம்பை அணிந்தவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று. கு-ரை: 'அரக்கர் கோமானாகிய வேந்தன்' என்றபடி. "மெல்லியலாள்" என்றது, வெருவுதற்கு உரிய இயைபு உணர்த்தியவாறு. சாந்தம் - சந்தனம் "நீறணிந்தான்" என்றது, 'நீறணிந்த தன்' எனப் பொருள் தந்து நின்றது.தாள் - கால் விரல்; ஆகுபெயர். ஏந்து - உயர்ந்த, பாந்தள் - பாம்பு.
|