84. திருச்செங்காட்டங்குடி பதிக வரலாறு: வாகீசர், திருப்புகலூரிறைவரைத்தொழுது பலநாள் தங்கிப்பணி செய்துவரும் நாள்களில் திருச்செங்காட்டங்குடி பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா.240) குறிப்பு: இத்திருப்பதிகம் சிவபெருமானைத் திருச்செங்காட்டங் குடியிற் கண்டு வணங்கிய இன்ப மீதூர்வின்கண், அப்பெருமான் பெருமைகள் பலவற்றையும் நினைந்து, அவனை நான் இத்தலத்திற் காணப்பெற்றேன்' எனமகிழ்ந்தருளிச் செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 297 | பதிக எண்: 84 |
திருச்சிற்றம்பலம் | 2918. | பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப் | | | பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி | | | இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல் | | | எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி | | | அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை | | | அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த் | | | திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச் | | | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 1 |
1. பொ-ரை: பெருமையாம் தன்மை உடையானும், பெறற்கு அரிய மாணிக்கம் போன்றவனும், விரும்பி நினைந்தவாறே துயிலெழு வார் மனத்தில் நிலைபெற்றுநின்ற மணிவிளக்கு ஆனவனும், நீர்நிலை யில் தாள்மேல் நின்ற தாமரை மலரில் எழுந்தருளியிருந்தவனும், எட்டுத்தோள்களையும் வீசி உலகத்தைத்தொழிற்படுத்தும் அரிய ஆற்றல் மிக்க பெரிய கூத்தினை இயற்றும் பெருமானும், அழகிய கனகக் குன்று போல்வானும், பண்டு ஆலின் கீழ் நால்வர்க்கும் திருந்திய மறைப்பொருளை உபதேசித்து அருள்செய்தானும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன்.
|