| 2919. | துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித் | | | தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட | | | அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும் | | | ஆரழலை அநங்கனுடல் பொடியாய் வீழ்ந்து | | | மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை | | | வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற | | | செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் தன்னைச் | | | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 2 |
கு-ரை: பெருந்தகை - பெருமையாகிய தன்மை; அஃது பண்பாகு பெயராய் அதனை உடையானைக் குறித்தது. பேணி - விரும்பி, எழுதல் - துயில்நீங்குதல். மணி விளக்கு -மணியாகிய விளக்கு. "நின்ற" என்றது, 'புறத்துக் காணப்பட்டு நின்ற 'என்றவாறு; முன்னே கூறப்பட்ட மனம் தாமரை வடிவிற்றாக அதனுள் எழுந்தருளியிருத்தல் போலப் புறத்தும் எழுந்தருளியிருப்பான் என்பார், இவ்வாறு அருளினார். உலகத்தைத் தொழிற் படுத்தும் பெருநடனமாதலின், "அருந்திறல் மாநடம்" ஆயிற்று. 'கனகக் குன்று, சுடர்க் குன்று' என்க. மாணிக்கம் முதலியன, உவமையாகு பெயர்கள். 2. பொ-ரை: உயர்ந்த நகத்தாலன்றிப் பிற கருவிகளால் அழியாதவனும் தன் ஆற்றலால் பலரையும் வென்று கூட்டிய வெற்றிகளை உடையவனும் ஆகிய இரணியனை மார்பைப்பிளந்தவனும், அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்தவனும் ஆகிய திருமாலும், நான்முகனும் தேடும் அணுகுதற்கரிய நெருப்புப் பிழம்பானவனும், மன்மதன் உடல்எரிந்து சாம்பராய் உருக்குலைந்து மங்கவும் அவன் மனைவி இரதி அவனைப் பெற்றுநகுமாறு செய்யவல்ல அமுதம் ஆனவனும், வளவிய கயிலை மாமலைமேல் நிலைத்து நின்றவனும், செம்பொன் நிறங்கொண்டு திரண்ட தோள்களைப் பெற்றசெல்வனும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன். கு-ரை: துங்கம் - உயர்வு. 'நகத்தால் அன்றிப் பிற கருவிகளால் அழியாதவனாகிய இரணியன்' என்க. "வென்றித் தொகுதிறல் இரணியன்" என்பதனை, 'திறலால்தொக்க வென்றிகளை உடைய இரணியன்' என மாற்றி யுரைக்க. 'பலரையும் வென்று கூடிய வெற்றிகளை உடையவன்' என்றபடி; 'வென்றி தொகு' எனப் பாடம் ஓதுதலும் ஆம். ஆகம் - மார்பு, கீண்ட - பிளந்த' 'அம் கல் நகு அத்திருமால்' எனப் பிரித்து;' அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்த அந்தத் திருமால்' என உரைக்க. இனி,'நரசிங்கம்
|