| 2925. | கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக் | | | கற்றார்கள் உற்றோருங் காத லானைப் | | | பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும் | | | பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை | |
7. பொ-ரை: எல்லாத் திக்குகளுமாய் நின்ற இறைவனும், ஏகம்பத்தில் பொருந்திநிற் பவனும், தெய்வத்தன்மை இல்லாத ஒன்றைத் தெய்வமாக மனத்துட் கொண்டுதம் மயிரைப் பறிக்கும் சமணருடைய பொய் ஒழுக்கப் படுகுழியில் நான்புக் கழுந்தி வீழாமல், தன் திருவடியாகிய கரையில் புகும்படி என்னைஎடுத்துப் பத்திக்குரிய வழியைக் காட்டிப் பாவத்தைத் தீர்த்து பழைய வினைப் பயனாகவிளைவன எல்லாவற்றையும் விலக்கி என் மனத்துள்ளே ஊறுந்தேனாய்த் தித்திப்பவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங் குடியில் கண்டேன். கு-ரை: எத் திக்குமாய் - எவ்விடத்திலும் நிறைந்து, "இல்லாத் தெய்வம்" என்றதில் உள்ள இன்மை, ஒன்றின் ஒன்று இன்மை. 'அவ்வின்மையை உடையதெய்வம்' என்றது. 'தெய்வத் தன்மை இல்லாத ஒரு பொருள்' என்றபடி. தெய்வத்தன்மையாவது வினையைத் தொழிற் படுத்துதலாகலானும், 'சமணர் கூறும் தெய்வம், அது செய்யமாட்டாது' என்பதனை அவரே உடம்பட்டுக் கொள்ளுதலானும் அவரது தெய்வத்தை, தெய்வத்தன்மை இல்லாத ஒரு பொருள் என்று அருளிச் செய்தார். பொத்தி - மூடி; பொதிந்து; உள்ளத்துள் இருத்தி' என்றவாறு. இனி 'தமக்குத்தெய்வம்' (தெய்வக்கொள்கை) இல்லாமையை மறைத்து' என்று உரைப்பினும் ஆம்.இனி அவர், அதுபற்றிக் கூறுவனவெல்லாம் உண்மையல்ல ஆதலின், 'அவர்பொய்யிற் புக்கழுந்தி வீழாமே' என்றருளினார். வீழ்தல் - ஆழ்ந்து போதல் ;"வீழ்தல்" என்றதனால், 'பொய்யாகிய படுகுழி' என்பது பெறப்பட்டமையின் "போத வாங்கி" என்பதற்கு, 'தன் திருவடியாகியகரையிற் புகுதும்படி எடுத்து' என உரைக்க. "போத வாங்கி" என்றது, "தூண்டில் வேட்டுவன் வாங்க வராது" என்றாற்போல இடவழுவமைதி; பத்தி -இறையன்பு; அதற்கு உரிய வழி இறையுணர்வு (சிவஞானம்), அதனைச் சூலைநோய்தீர்க்கும் வகையால் அருளினமையால், "பத்திக்கே வழிகாட்டி" என்று அருளினார். வினைப் பயம் - வினையை அஞ்சும் அச்சம், இனி, 'பயம் - பயன்' எனினுமாம். மனத்துள்ளே 'தித்தித்து ஊறும் தேன்' என்க. 8. பொ-ரை: உண்மை நூல்களைக் கல்லாதார் மனத்தை அணுகாது அகலும் கடவுளும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள் ஆராய்ந்து அடையும்
|