| 2926. | அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை | | | அலைகடலில் ஆலாலம் அமுது செய்த | | | கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக் | | | கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை | | | உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட் | | | குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத் | | | தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச் | | | செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 9 |
இனி, இறைவன் நூலைக் கற்றவர்கள் அவற்றின் பொருளைப் பலகாலும் சிந்தித்துப் பிறரொடு வினாதல், விடுத்தல்கள் செய்து பயின்றும் இறைவனை உணர்வராகலான், "கற்றார்கள் உற்று ஓரும் காதலான்" என்று அருளினார். உற்று ஓர்தல் - மனம் பற்றி ஆராய்தல். காதலான் - அவர்களிடத்துக் கொள்ளும் அன்பினை உடையவன். "கற்றல் கேட்ட லுடையார் பெரியார் கழல்கையால் தொழுதேத்த" (தி.1. ப.1. பா.2.) என்றருளினார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும். பொல்லாத நெறி, புத்த மதம்.உகந்தார் - (சிவநெறியை விடுத்து அதனை) விரும்பியவர். பொன்றிவிழ -கெட்டொழிய. நில்லாத - நிலையாத. நிணக் குரம்பை - புலாற் குடில்; உடம்பு.பிணக்கம் - மாறுபாடு; அவை பிணி முதலிய துன்பங்கள். நிறை தவம் - நிறைய வேண்டுவதாய தவம். 'தவம் நிரம்பாதிருந்தமையானே சமண் சமயம் புகுதல் உண்டாயிற்று' என்பதும், பின்னர் அக்குறையினைச் சூலைநோய்த் துன்பத்தெழுந்த உணர்வினால் நீக்கி 'நிறைவித்தான்' என்பதும் நினைந்து, "நிறைதவத்தை நிறைவித்து" என்றருளினார். இதனையே சேக்கிழார்," முன்னமே முனியாகி எமை அடையத் தவம் முயன்றான் - அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம்" (தி.12 திருநாவுக். புரா.48.) என்பதனால் விளக்கினார். செல்லாத செந்நெறி - புடை பெயர்ந்து போகாத செவ்விய நெறி; 'அறிவினால் அறியும் முறை' என்றதாம். 9. பொ-ரை: கிடைத்தற்கரிய பெரும்பொருளாய்த் திகழ்பவனும், அலையை உடையகடலிடத்துத் தோன்றிய ஆலால நஞ்சினை உண்ணக் கழிந்த கண்டத்தினனும், சிவந்த கண்களையுடைய இடபத்தின் மேலேறி
|