பக்கம் எண் :

1183
 
2927.போரரவ மால்விடையொன் றூர்தி யானைப்

புறம்பயமும் புகலூரும் மன்னி னானை

நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்

நீங்காமை வைத்தானை நிமலன் தன்னைப்

பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்

பிறங்கொளிவாள் அரக்கன்முடி யிடியச் செற்ற

சீரரவக் கழலானைச் செல்வன் தன்னைச்

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

10

திருச்சிற்றம்பலம்


ஒளிவிடும் சிறந்த மாணிக்க மணிபோல் விளங்குந் தோற்றத்தை உடையவனும், தத்தம் நிலைக்கு ஏற்ற தொண்டினைச் செய்யும் அடியார்க்கு உலகங்களைக் கற்பம் முடியுமளவும் ஆள அளிப்பவனும், அழிவில்லாதவனும், உமையம்மை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன்.

கு-ரை: அரிய பெரும் பொருள் - கிடைத்தற்கு அரிய பெரும் பொருள். 'செங்கண்ஏற்றின்மேல், கரியதொரு கண்டத்தின் கண் கதிர் விடுகின்ற பெரிய நீலமணி விளங்குவது போலும் காட்சி தோன்ற நிற்பவன்' என்க. உரிய - தம் நிலைக்குஏற்ற, "தொழில்" என்றது தொண்டினை.

"முழுது" என்றது, 'கற்பம் முழுதும்' எனக் காலத்தின் மேல்நின்றது. உலப்பு - அழிவு. "தெரிவை" என்புழி இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.

10. பொ-ரை: போரிடத்து எழுப்பும் ஒலியையுடையதும் பெருமை மிக்கதும் ஆகிய ஒரு விடையை ஊர்தியாக உடையவனும், புறம்பயத்தும் புகலூரிலும் நிலைத்து நின்றவனும், கங்கையும், பாம்பும் நிலவும் செஞ்சடைமேல் நிலாக்காலும் வெண்டிங்கட்பிறையை என்றும் நீங்காதவாறு வைத்தவனும், நிமலனும், மிக்க ஒலியுடைய புட்பக விமானத்தையுடையவனாய், வெற்றியால் மூவுலகங்களிலும் விளங்கிய புகழுடைய கொடிகள் அரக்கனாகிய இராவணனுடைய முடிகள் பொடியாகும்படி ஒலிக்கும் அழகிய கழலினனும், செல்வனும் ஆகிய சிவபெருமானை நான்செங்காட்டங்குடியில் கண்டேன்.