பக்கம் எண் :

1184
 

கு-ரை: போர் அரவம் - போருக்காக எழுப்பும் ஒலி. 'ஒன்றாகிய ஊர்தியை உடையவன்' என்க; 'ஒரு விடை ஊர்தி' எனற் பாலது, "விடை ஒன்று ஊர்தி" எனப்பட்டது.

புறம்பயம், புகலூர் சோழநாட்டுத் தலங்கள்.

நீர் அரவச் செஞ்சடை - நீரையும் பாம்பையும் உடைய செம்மையாகிய சடை.

நிலா வெண்டிங்கள் - நிலவை வீசுகின்ற வெள்ளியபிறை. பேர் அரவம் - மிக்க ஒலி.

புட்பகத் தேர் - புட்பகமாகிய ஊர்தி, 'வென்றி வாளரக்கன் பிறங்கொளி முடி' எனக் கொண்டு கூட்டுக.

இடிய - பொடியாகும்படி. சீர் - அழகு. அரவம் - ஒலி.

திருநாவுக்கரசர் புராணம்

சீர்தரு செங்காட் டங்குடி நீடுந் திருநள்ளாறு

ஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி

வார்திகழ் மென்முலை யாளொரு பாகன் திருமருகல்

ஏர்தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.

-தி.12 சேக்கிழார்.