பக்கம் எண் :

1188
 
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்

ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத்

தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய

சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

4

2932. கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்

கனலாட வல்லான்காண் கையி லேந்தும்

மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்

வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்

ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்

உரையவன்காண்உணர்வவன்காண்உணர்ந்தார்க்கென்றுந்

தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய

சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

5


உலகத்தோற்றத்திற்கு முன் ஆனவனும், உலக ஒடுக்கத்திற்குப்பின் ஆனவனும், வீடு பேறு ஆனவனும், உலகங்களைக் காப்பவன் ஆனவனும், உலகிற்குக் கண் ஆனவனும், இறந்துபட்ட பிரமவிட்டுணுக்களுடைய என்புக்கூடுகளை அணிந்தவனும், கயிலை மலையினனும், ஆக்கந்தருபவனும், ஆன்ஐந்தில் விரும்பி மூழ்குபவனும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அறியமுடியாத அழற்பிழம் பாய்த் தோன்றிய தேவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

கு-ரை: மூவன் - மூப்பினன்; முன்னோன்; 'மூவுருவாயவன்' எனலுமாம். "முன்பின்" என்பன, உலகத் தோற்ற ஒடுக்கங்களை எல்லையாக உடையன. முடிவு - வீடு பேறு.'காவல்' என்பது அடியாக, 'காவலன் என்பது வருதல் போல, அதன் முதனிலையாகிய 'கா' என்பது அடியாக, "காவன்" என்பது வந்தது. "காப்பவன்" என்பது பொருள். ஆவன் - ஆக்கம் தருபவன். ஆ அகத்து - பசுவினிடத்து உள்ள. 'அயற்கு' என்புழியும் எண்ணும்மை விரிக்க.

5. பொ-ரை: திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் காட்டில் உறைபவனும், வேடனாகிப் பார்த்தனொடு பொருதவனும், கனல் ஆட வல்லவனும், மானைக் கையில்ஏந்தியவனும், நான்கு மறைகளாகவும் ஆனவனும், வலிய இடபமொன்றை