பக்கம் எண் :

1189
 
2933.உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்

ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்

புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்

புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்

நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக

நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்

செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய

சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

6


ஏற வல்லவனும், பலவகை உடம்புகளாயும் நிற்பவனும், சீவான்மாக்களின் உயிர்க்குயிரானவனும், சொல் ஆனவனும் சொற்பொருள் உணர்வு ஆனவனும், தன்னை உணர்ந்தார்க்கு எக்காலத்தும் தேனாய் இனிப்பவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

கு-ரை: கானவன் - காட்டில் உறைபவன். கானவனாய் - வேடனாகி; பொருதது (போர் செய்தது) அருச்சுனனோடு, வல் ஏறு - தன்னைத் தாங்க வல்லதாகிய விடை; அற விடை; அறம் அன்றி, 'மறம் தாங்கலாற்றாது' என்பதாம். பிறர் அறத்தின் வழிப்படுவோராய் அதனைச் செலுத்தமாட்டாமை தோன்ற, 'ஏறவல்லான்' என்று அருளினார். ஊன் உடம்பு; ஊனவன் - பலவகை உடம்புகளாயும் நிற்பவன். உரை -சொல். உணர்வு - சொற்பொருள் உணர்வு.

6. பொ-ரை: திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் உயிரோடு உடங்கியைந்து நின்றவனும், எல்லா உறவினருமாய் ஆனவனும், ஓரிடமும் எஞ்சுதலில்லா வகை எவ்விடத்தும் நிறைந்து நின்றவனும், அழிவில்லாதவனும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனும், நல்ல தவவேடங் கொண்டவனும், சரணடைந்த பிரமசாரிக்காக அவனைக் கிட்டிய பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.

கு-ரை: உற்றவன் - (உயிர்களோடு) உடங்கியைந்து நின்றவன். உறவு எல்லாம் - அப்பன், அம்மை, உடன் பிறந்தார் முதலிய பலரும். 'ஒழிவு அற எங்கும் நின்று' என்க; 'ஓரிடமும் எஞ்சுதல் இல்லாது எவ்விடத்தும் நிறைந்து நின்று' என்பது பொருள். 'ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி" (தி.8 திருவா. போற்றித் - 215.) எனவும், "உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த யோகமே"