86. திருவாலம்பொழில் பதிக வரலாறு: சுவாமிகள், ஆவடுதண்டுறையிலிருந்து திருப்பழை யாறை வடதளி சென்று தொழுது பொன்னியின் இருகரைகளிலும் உள்ள தலங்களை வணங்கிக் கொண்டு திருவானைக்கா செல் பொழுதில் திருவாலம்பொழில் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம் (தி.12 திருநாவு. புரா. 301.) குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபெருமான்மீது அன்பு உண்டாகுமாறு அவன் பெருமைகள் பலவற்றையும் எடுத்தோதி, 'அவனை நினைக்க' என நெஞ்சிற்கு அறிவுறுத்தி அருளிச்செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 299 | பதிக எண்: 86 |
திருச்சிற்றம்பலம் | 2937. | கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக் | | | கமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை | | | உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை | | | உணர்வெலா மானானை ஓசை யாகி | | | வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை | | | மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய | | | திருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய | | | திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 1 |
1. பொ-ரை: எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும், நுதலிடத்துக் கண் பெற்றவனும், பிரமனது தலையை அரிந்து, அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும், அழகிய உமையம்மை விளங்கும் உடலின் ஒரு கூற்றை உடையவனும், உயிர்களுடைய உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழியில் மன்னும் எம்பெருமானும், மறைக்காட்டிலும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மையுடையவனும் ஆகும், தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழில் சிவபெருமானை, நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக.
|