| 2938. | உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக | | | வுடையானை யுடைபுலியி னதளே யாகத் | | | தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத் | | | தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம் | | | பரித்தானைப் பவளமால் வரையன் னானைப் | | | பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச் | | | சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய | | | திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 2 |
கு-ரை: கரு - எல்லாவற்றிற்கும் முதல். கண் நுதல் - கண்ணை உடைய நெற்றியை உடையவன். கமலத்தோன் - பிரமன். உரு ஆர்ந்த - அழகு நிறைந்த. உயிர்களும், அவைகள் உணரும் பொருள்களும் எண்ணிறந்தனவாதல் பற்றி, "உணர்வெலாம்" என்று அருளிச் செய்தார். "ஓசை" என்றது, எழுத்தைப் புலப்படுத்தும் ஓசையை. 'அவ் வோசையாகி வருவான்' என்றது. உணர்வாய் நின்று அதனை வளர்க்குமாற்றினை விளக்கியபடி. வலஞ்சுழி, மறைக்காடு, ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள். மேய (மேவிய) - விரும்பி எழுந்தருளிய. திருவான் - மேன்மையை உடையவன். 'பரம்பைக்குடி' என்பது திருவாலம் பொழிற்குச் சார்பாய் உள்ள ஊர்; 'பொழில்' சோலையாதலின், அஃது அவ்வூரைச் சார்ந்துள்ளது என்க. 2. பொ-ரை: களிற்றின் தோலை உரித்தவனும், அத்தோலைப் போர்வையாகவும், புலியின் தோலை உடையாகவும், உடையவனும், சடைமேல் கங்கையைத் தரித்தவனும், அழகிய கையிடத்து உருவத்தழலை ஏந்தியவனும், ஆலகால விடத்தை அமுது செய்தவனும், இக்கோலத்தையெல்லாம் மேற்கொண்டு நின்றவனும், பவளப் பெருமலையன்னவனும், ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு திருமாலுக்கு அன்று சக்கராயுதத்தை வழங்கி மகிழ்ந்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக. கு-ரை: 'களிறதன் தோல் உரித்தானை, (அதனைப்) போர்வையாகவும் புலியின் அதளே உடையாகவும் உடையானை, சடையதன் மேல் கங்கையையும் அங்கையில் தழல் உருவையும் தரித்தானை' என்க.
|