| 2948. | வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண் | | | மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண் | | | கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண் | | | கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண் | | | அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண் | | | அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண் | | | செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண் | | | சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே. | 3 |
| 2949. | பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம் | | | பீடழியச் சாடி யருள்கள் செய்த | | | முத்தன்காண் முத்தீயு மாயினான் காண் | | | முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க | |
3. பொ-ரை: சிவபுரத்து எம் செல்வனாம் சிவபெருமான் மணங்கமழும் மலர்களையணிந்த கூந்தலையுடைய உமையம்மையின் கணவனும், நான்முகனும் திருமாலும் காணமுடியாத வலிமையுடைய வனும், அசையுமியல்பினையுடைய மதயானை துன்பமிகுதியால் பிளிற, அதன் தோலை உரித்தவனும், கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் இருண்ட கண்டத்தவனும், அம்பர் நகரத்துப் பெருங் கோயிலில் விரும்பி உறைபவனும், அயவந்தித்திருக்கோயிலில் உள்ளவனும், ஐயாறனும், செம்பொன்போல் திகழும் திருவுருவத் தவனும், ஆவான். கு-ரை: வம்பு - வாசனை; இயற்கை மணம். கம்பம் - அசைவு. அம்பர் நகர்ப் பெருங்கோயில் - அம்பர்ப் பெருந்திருக்கோயில்; இது சோழநாட்டுத் தலம், "அயவந்தி" என்பது, திருச்சாத்த மங்கைத் தலத்தின் திருக்கோயிற் பெயர்; இத்தலம், சோழ நாட்டில் உள்ளது; திருநீலநக்க நாயனார் தோன்றியருளி அயவந்தி நாதரை வழிபட்டது. ஐயாறு - திருவையாறு. 4. பொ-ரை: சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான். பித்தனாய், தக்கன் வேள்வியை முழுதும் பெருமையிழக்க அழித்துப் பின் அனைவருக்கும் அருள்கள் செய்த முத்தனாய், முத்தீயும் ஆனவனாய், முனிவர்க்கும் தேவர்க்கும் முதலாகும் மேன்மை மிக்க தந்தையாய், புத்தூரில் அமர்ந்தவனாய், அரிசிற்பெருந்துறையை இருந்து ஆளுமிடமாகக்கொண்ட சித்தனாய், நறையூர்ச் சித்தீச்சரத் தவனாய்த் திகழ்பவன் ஆவான்.
|