பக்கம் எண் :

1205
 
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்

அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட

சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்

சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

4


2950.தூயவன்காண் நீறு துதைந்த மேனி

துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்

தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்

சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான் காண்

ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்

அடியார்கட் காரமுத மாயி னான்காண்

சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்

சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.

5


கு-ரை: பீடு - பெருமை. தேவர்கட்கே யன்றித் தக்கனுக்கும் பின்னர் அருள் செய்தமை யறிக. முத்தன் - பாசம் இல்லாதவன். முத்தீ, 'ஆகவனீயம், காருகபத்தியம். தக்கிணாக்கினி' என்பன. அத்தன் - தந்தை; 'முனிவர்க்கும் தேவர்க்குமே அத்தன் எனச் சிறந்தெடுத்தருளிச் செய்தது, அவர்கள் அந்நிலையை இயல்பில் அனுபவமாக ஐயமின்றி உணரும் பிறப்பினராதல் பற்றி. அரிசிற் பெருந்துறையை எடுத்தோதினமையால், புத்தூர், சோழநாட்டில் உள்ள அரிசிற்கரைப் புத்தூர் என்க. புகழ்த்துணை நாயனார் தோன்றியருளி, திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டது. பாண்டிநாட்டுத் தலமாகிய புத்தூர், இதனின் வேறு. அரிசில் - அரிசில் ஆறு. சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன். சித்தீச்சரம், நறையூர்ச் சித்தீச்சரம்; சோழ நாட்டுத் தலம்.

5. பொ-ரை: சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், தூயவனும், ஒளி விளங்கும் பளிங்கு போன்று, திருநீறு செறிந்த மேனிச் சோதியனும், தீயாய்த் திகழ்பவனும், கொடிய அசுரருடைய புரங்களை அழித்தவனும், சிறுமானைச் செங்கையிலேந்திய எம் பெருமானும், தாய் போன்றவனும், ஆரூரில் அம்மானாய்த் திகழ்பவனும், அடியவர்க்கு ஆரமுதம் ஆனவனும், மற்றையர்க்குத் தொலைவில் உள்ளவனும், பாதுகாவலான நெறியினனும் ஆவான்.

கு-ரை: 'மேனி சோதியான்' என இயையும், "சோதியான்" என,