88. திருஓமாம்புலியூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருமுதுகுன்றைப் பணிந்து தில்லை வரும் வழியில் வணங்கிப் பாடியதாகலாம் இத்திருப்பதிகம். குறிப்பு: இத் திருப்பதிகம், சிவபிரானது பெருமையைப் பலவாற்றானும் நினைந்து, அவனைச்சேராது மயங்கிய மயக்க உணர்விலே பல நாள்கள் போயினமை கருதி இரங்கியருளிச் செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 301 | பதிக எண்: 88 |
திருச்சிற்றம்பலம் | 2954. | ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை | | | அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும் | | | ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை | | | எழுபிறப்பும் எனையாளா வுடையான் தன்னை | | | ஊராரும் படநாகம் ஆட்டு வானை | | | உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னுஞ் | | | சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச் | | | சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 1 |
1. பொ-ரை: கூர்மைபொருந்திய மூவிலை வேலை அங்கையிடத்துக் கொண்டவனும், அலையையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், தேவர்கள் புகழும் அழகு நிறைந்த மதியைத் தன்னுட்கொண்ட சடையனும், இனி எனக்கு எழ இருக்கும் பிறப்புக்களிலும் என்னை அடிமையாக உடையவனும், ஊரும் இயல்பினதாகிய படநாகத்தை ஆட்டுபவனும் ஆகி உயர்புகழ்சேரும் ஓமாம் புலியூரிடத்தே நிலைத்து நிற்கும் சிறப்பினை உடைய வடதளியில் விளங்கும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன். கு-ரை: ஆர் ஆரும் - கூர்மை பொருந்திய. மூவிலை வேல் - சூலம், ஏர் ஆரும் - அழகு நிறைந்த. ஊர் ஆரும் - ஊர்தல் பொருந்திய,
|