| 2955. | ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா | | | அமரர்தொழுங் கழலானை யமலன் தன்னைச் | | | சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன் | | | சுடர்இரவி அயிலெயிறு தொலைவித் தானை | | | ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும் | | | உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும் | | | தீதில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் | | | சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 2 |
ஓமாம்புலியூர்த் திருக்கோயில், 'வடதளி' என்னும் பெயர் உடையது. திகைத்து - மயங்கி, செலுத்தினேன் - போக்கினேன். ஏகாரங்கட்கு மேலெல்லாம் (ப.54) உரைத்தவாறே உரைக்க. 2. பொ-ரை: தன்னின்வேறு பிரித்து அரி என்றும் அயனென்றும் அறிய ஒண்ணாத ஆதியானவனும், தேவர்கள் தொழும் கழலினனும், இயல்பாகவே பாசமில்லாதவனும், ஒளியுமிழும் சந்திரனுடைய கலைகளைத் தொலையச் செய்தவனும், தக்கனையும் எச்சனையும் தக்கவாறு தண்டித்தவனும், ஒளிவீசும் இரவியுடைய கூரிய பற்களைத் தகர்த்தவனும் ஆகி, அந்தணர்கள் வேதங்களை மிக ஓதி மூன்று எரிகளையும் முறையே ஓம்புதலினால் உயர்ந்த புகழைப் பொருந்தும் ஓமாம்புலியூரில் திகழும் தீதில்லாத வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள்பல வீண் போக்கினேன். கு-ரை: சிவபிரானுக்கு உரிய 'ஆதியான்' என்னும் பெயர் உருத்திரனுக்கும் உரியதாமாகலின், ஈண்டு உருத்திரனை, "ஆதியான்" என்று அருளினார் என்க, "என்று" என்பது எண்ணிடைச் சொல்; அஃது ஓரிடத்து நின்றே பலவிடத்தும் இயையுமாகலின், "ஆதியான்" என்றது முதலாக, "அமரர்" என்பது ஈறாக உள்ள எல்லாவற்றொடும் இயைக்க. இவ்வெண்ணிடைச் சொல்லின் தொகைப் பொருளைத் தரும், 'இவர்' என்னும் சொல், இறுதிக்கண் தொகுத்தலாயிற்று. "அறிய ஒண்ணா அமரர்" என்றது, 'அளவறியப் படாத எண்ணிறந்த - தேவர்' என்றருளியவாறு. அமலன் - இயல்பாகவே பாசம் இல்லாதவன். எச்சன் - வேள்வித் தெய்வம். 'இரவியது எயிறு' என்க. அயில் - கூர்மை. "எயிறு" என்றதனை,
|