பக்கம் எண் :

1213
 
2957.அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ

அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை

வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ

விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் தன்னை

ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்

உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் நாளும்

தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் தன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

4


2958.பாங்குடைய எழில்அங்கி யருச்சனைமுன் விரும்பப்

பரிந்தவனுக் கருள்செய்த பரமன் தன்னைப்

பாங்கிலா நரகதனைத் தொண்ட ரானார்

பாராத வகைபண்ண வல்லான் தன்னை


4. பொ-ரை: பகைத்தவர் புரமூன்றும் வெந்து பொடியாமாறு அழல் உண்டாக விழித்த கண்ணினனும், தேவர்கட்குத் தலைவனும், வெற்றியால் மிக்கு விளங்கிய காலன் உயிரிழந்து விழ விளக்கம் மிக்க தன் திருவடியால் உதைத்த விகிர்தனும் ஆகி, புகழ்பொருந்திய அந்தணாளர் நாளும் முத்தீயையும் ஓம்புதலினால் வரும் உயர் புகழையும் நான்மறை முழக்கத்தையும் உடைய ஓமாம்புலியூரில் தென்றற்காற்று மிக்குத் தவழும் வடதளிவாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

கு-ரை: அன்றினவர் - பகைத்தவர். 'அழல் உண்டாக விழித்த' என்க. வென்றி, எவ்வுயிர்மேற் செல்லினும் அதனைக் கைக் கொண்டே மீளுதல்; 'அச்செயல் இங்குச் செல்லாதாயிற்று' என்றதாம். "எடுத்து" என்றது, 'எடுத்து உதைத்த' எனத் தன் காரியம் தோற்றி நின்றது. ஒன்றிய சீர் - பொருந்திய புகழ். இருபிறப்பர் - அந்தணர். 'நான்மறையை உடைய ஓமாம்புலியூர்' என்க. "தென்றல்மலி வடதளி" என்றது. அதனது பரப்பும், சோலை வளமும் குறித்தவாறு.

5. பொ-ரை: முன்செய்த நன்மையுடையனாகிய அழகிய அக்கினிதேவன் அருச்சனை செய்ய விரும்ப அவன் மேல் இரக்கங் கொண்டு அவன் அதனை இயற்ற அருள் செய்த பரமனும், தன் தொண்டரானார், தீங்குடைய நரகினைப் பாராதவாறு பண்ண வல்லவனும் ஆகி, நாற்புறமும் உயர்ந்தமதில் தழுவி நிற்கும் அழகுடைய ஓமாம்புலியூரில்