| 2962. | வார்கெழுவு முலையுமையாள் வெருவ அன்று | | | மலையெடுத்த வாளரக்கன் தோளுந் தாளும் | | | ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே | | | இன்னிசைகேட்டிருந்தானை இமையோர் கோனைப் | | | பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப் | | | பைம்பொழில்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும் | | | சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் தன்னைச் | | | சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: கச்சணிந்த தனத்தினள் ஆகிய உமையாள் அஞ்சுமாறு அன்று கயிலை மலையைப் பெயர்த்த கொடிய அரக்கனுடைய இருபது தோள்களையும் இருதாள்களையும் அழகிய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அச்சினத்தினின்றும் மீண்டு அவனது இன்னிசையைக் கேட்டு உவந்தவனும், தேவர்களின் தலைவனும் ஆகி, புவிமுழுதும் பரவும் புகழினையுடைய மறையோர் மிக்கு வாழ்கின்றதும் மாடங்கள் நிறைந்ததும், பசியபொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய ஓமாம்புலியூரில், சிறப்புமிக்க வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண்போக்கினேன். கு-ரை: வார் - கச்சு. கெழுவு - பொருந்திய. ஏர் - அழகு. இறுத்து - நெரித்து. "கேட்டிருந்தான்" 'உவந்தான்' என்னும் குறிப்பினது. பயிலும் - மிக்கு வாழ்கின்ற. 'பயிலும் புலியூர், மாடப்புலியூர். 'பொழில் சேர்தரும் புலியூர்' என்க. சீர் - புகழ்.
|