| 2965. | தொண்டர்கள் தம்தகவி னுள்ளார் போலும் | | | தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும் | | | பண்டிருவர் காணாப் படியார் போலும் | | | பத்தர்கள் தம்சித்தத் திருந்தார் போலும் | | | கண்டம் இறையே கறுத்தார் போலும் | | | காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும் | | | இண்டைச் சடைசேர் முடியார் போலும் | | | இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 3 |
நீங்காமல் உள்ளவரும், சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊர வல்லவரும், தம்மை அடைந்தவரிடத்து அன்புடையவரும், எழுவகைப் பிறவிகளுக்கும் தாமே காரணரும் ஆவார். கு-ரை: கோழிக் கொடியோன் - முருகக் கடவுள். தாதை - தந்தை. கொம்பு அன்னாள் - பூங்கொம்புபோன்றவள்; உமாதேவி. குளிர்ந்தார் - மகிழ்ந்தார். ஊழி முதல்வர் - ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவர். உம்மை. சிறப்பு. "தாமே" என்னும் ஏகாரம், பிரிநிலை; அது, பிறர் இன்றித் தாம் ஒருவரேயாய முழு முதற்றன்மையை விளக்கிற்று. ஆழி என்றது இரட்டுற மொழிதலாய், சூரிய சந்திரராகிய மண்டிலங்களையும், தேர்ச் சக்கரங்களையும் உணர்த்தின; எனவே, 'சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊரவல்லவர்' என்றதாயிற்று. வித்தகர் - திறலுடையவர். 'ஏழு பிறவிக்கும் தாமே' என்புழி, 'தாமே காரணர்' எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. 3. பொ-ரை: இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே, தொண்டர்களுடைய மெய்யன்பினிடத்துத் திகழ்பவரும், தூய ஞானநெறிக்குப் பற்றுக்கோடாய் நின்றவரும், பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும், பக்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும், கண்டம் சிறிது கறுத்தவரும், மன்மதனையும் இயமனையும வெகுண்டு ஒறுத்தவரும், முடி மாலையணிந்த சடைமுடியவரும் ஆவார். கு-ரை: தகவு - தகுதி; அது, மெய்யன்பு. தூநெறி - ஞான நெறி, 'அதற்குப் பற்றுக்கோடாய் இருப்பவர்' என்பதாம். இருவர், மாலும், அயனும். படி - நிலைமை. இறையை - சிறிதே. இண்டை - முடிமாலை.
|