பக்கம் எண் :

1222
 
2967.சூழுந் துயரம் அறுப்பார் போலும்

தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்

ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்

ஆடலுகந்த அழகர் போலும்

தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு

தன்மை யளித்த தலைவர் போலும்

ஏழு பிறப்பு மறுப்பார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

5


2968.பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்

பாரூர் விடையொன் றுடையார் போலும்

பூதப் படையாள் புனிதர் போலும்

பூம்புகலூர் மேய புராணர் போலும்

வேதப் பொருளாய் விளைவார் போலும்

வேடம் பரவித் திரியுந் தொண்டர்

ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

6


5. பொ-ரை: இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே, வந்து வளைத்துக்கொள்ளும் துயரங்களை நீக்குபவரும், படைப்பு அழிப்புக்களைச் செய்து நிற்பவரும், ஆழ மிக்க கடலிடத்துத் தோன்றிய நஞ்சை உண்டவரும், கூத்து ஆடுதலை விரும்பும் அழகரும், தாழ்ந்த மனத்தினை உடைய அடியேனையும் அடிமைகொண்டு ஞானமளித்த தலைவரும், ஏழுவகையாகவும் பிறத்தலை அறுத்தெறிபவரும் ஆவார்.

கு-ரை: சூழும் - வந்து வளைத்துக்கொள்கின்ற. தோற்றம் இறுதி - படைப்பு அழிப்புகள்; உம்மைத் தொகை. அவைகளைச் செய்பவரை அவரேயாகச் சார்த்தியருளிச் செய்தார். தாழ்வின் மனம் - தாழ்வினை (இழிவினை) உடையமனம். 'மனத்தேனையும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. தன்மை - பெருந்தன்மை; ஞானம்.

6. பொ-ரை: இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே, திருவடிகளில் கட்டப்பட்ட சிலம்பினரும், பூமிமேல்