பக்கம் எண் :

1223
 
2969.பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்

பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்

கல்லாதார் காட்சிக் கரியார் போலும்

கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்

பொல்லாத பூதப் படையார் போலும்

பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்

எல்லாரு மேத்தத் தகுவார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

7


நடக்கும் ஓர் இடபத்தை ஊர்தியாக உடையவரும், பூதப்படையைச் செயற்படுத்தும் புனிதரும், புகலூரைப் பொருந்திய புராணரும், வேதங்களின் பொருளாய் விளங்குபவரும், திருநீறு, கண்டிகை, சடை, முதலியவை எங்கே காணப்படினும், அங்கேயெல்லாம் தம்மை ஏத்தி இறைஞ்சி நிற்கும் தொண்டர் துன்பப்படா வண்ணம் காத்து நின்றாரும் ஆவார்.

கு-ரை: பார் ஊர் விடை - பூமியின்மேல் நடத்துதற்குரிய இடபம்; 'அன்னம், கருடன் முதலியனபோல ஆகாயத்தில் நடத்துதற்குரிய ஊர்தி அன்று' என்றபடி. பூம்புகலூர், அழகிய புகலூர்; இது சோழநாட்டுத்தலம்; சுவாமிகள் இறைவன் திருவடியடைந்த இடம். வேடம் பரவித் திரிவார் - திருநீறு கண்டிகை, சடை, கல்லாடை முதலியவைகள் எங்கே காணப்படினும் அங்கெல்லாம் சிவபிரானை ஏத்தி இறைஞ்சி நிற்பவர். ஏதப்படாவண்ணம் - துன்பத்திற் பொருந்தாத படி.

7. பொ-ரை: இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே, பற்கள் நிறைந்த தலையோட்டில் உணவு ஏற்று உண்பவரும், பத்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும், மெய்ந்நூல்களைக் கல்லாதவரால் காணப்படாதவரும், அவற்றைக் கற்பவரின் துன்பங்களைக் களைபவரும், கொடுமைமிகும் பூதப்படையினரும், அலைமோதுங் கடல் ஏழும் குலமலை ஏழும் தாமே ஆனவரும், எல்லாரும் ஏத்துதற்குக் காரணமான அருளினரும் ஆவார்.

கு-ரை: பல் ஆர் - பற்கள் நிறைந்த. 'பல் ஆர் ஓடு' என இயையும். இனி, பிரமர்தாம் பலராதல் பற்றி, "பல்லார் தலை" என்றார் எனினுமாம். "கல்லாதார், கற்றார்" என்பன, அருள் நூல்களைக் கல்லாதார் கற்றார்களைக் குறித்தன. ஏதம் - துன்பம். 'பொல்லாத பூதப்படை' என்றது, அவை பிறரைத்