பக்கம் எண் :

1224
2970.மட்டு மலியுஞ் சடையார் போலும்

மாதையோர் பாக முடையார் போலும்

கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்

காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்

நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்

ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்

எட்டுத் திசைகளுந் தாமே போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

8


2971.கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு

கழற்போது தந்தளித்த கள்வர் போலும்

செருவிற் புரமூன்றும் அட்டார் போலும்

தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்


தீண்டி வருத்துவனவாதல் பற்றி; இஃது இனம் பற்றி நயம்பட அருளிச் செய்ததன்றிச் சிவபூதங்கள் அன்ன அல்ல; நல்லனவே செய்வன என்க. பொருகடல் - அலை மோதுகின்ற கடல். "ஏழ்" என்றதனைக் கடலுக்கும் கூட்டுக. "தகுவார்" என்றது, பெருமை நோக்கியே யன்றி, அருள் நோக்கியுமாம்; அதனால், 'சிலர்' ஏத்தாதொழிதல் என்' என இரங்கியருளிய வாறாயிற்று.

8. பொ-ரை: இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே, பூக்களின் தேன்மிகும் சடையினரும், உமையை ஒரு பாகத்திலுடையவரும், துன்பம், பிணிகளைத் தவிர்ப்பவரும், இயமன் உயிருக்கு இறுதி கண்டவரும், எப்பொழுதும் கூத்தாடுந் தலைவரும், நிலம், நீர், தீ, வளி, ஆகாசம் ஆம் ஐம்பூதங்கள் ஆனவரும், எட்டுத் திசைகளும் தாமே ஆனவரும் ஆவார்.

கு-ரை: மட்டு - தேன்; இது, கொன்றை மலரில் மிகுந்துளது. மலியும் - நிறைந்த. கட்டம் - துன்பம்; மனக்கவலை. "கட்டமும் பிணியும் தவிர்ப்பார்" என்க. பயின்று ஆடுதல் - எப்பொழுதும் ஆடுதல். ஞாலம் - நிலம். வெளி - வான். கால் - காற்று.

9. பொ-ரை: இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே நான் கருவாய்ப் பொருந்திய காலத்திலேயே மெய்யுணர்வைப் பெறும்