பக்கம் எண் :

1225
 
மருவிப் பிரியாத மைந்தர் போலும்

மலரடிகள் நாடி வணங்க லுற்ற

இருவர்க் கொருவராய் நின்றார் போலும்

இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

9


2972.அலங்கற் சடைதாழ ஐய மேற்று

அரவம் அரையார்க்க வல்லார் போலும்

வலங்கை மழுவொன் றுடையார் போலும்

வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்


அவாவை என்பால் உண்டாக்கிப் பின் திருவடித் தாமரைகளைத் தந்து காத்த கள்வரும், போரில் பகைவர்புரம் மூன்றையும் அழித்தவரும், தேவர்க்கும் தேவராம் செல்வரும், கூடியபின் பிரியாத மைந்தரும், தம்முடைய மலரடிகளை விரும்பி வணங்கிய பிரமனுக்கும் திருமாலுக்கும் ஒப்பற்ற தலைவராய் நின்றவரும் ஆவார்.

கு-ரை: "ஆண்டு" என்றது, மெய்யுணர்வைப் பெறும் அவாவை உண்டாக்கினமையை; இது, "கருவுற்ற நாள் முதலாக வுன்பாதமே காண்பதற்கு, உருகிற்றென் உள்ளமும்; நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்" எனத் திருவிருத்தத்துள் அருளிச்செய்தமையான் அறியப்படும் (தி.4. ப.99. பா.6.) 'பின்பு கழற்போது தந்தளித்த' என்க. அளித்த - காத்த. "கள்வர்" என்று அருளினார். முதலில் வெளிப்படாதிருந்து பின்பு வெளிப்பட்டமையின். செருவில் - போரின்கண்; 'செருச் செய்கின்ற வில்லால்' என்று உரைத்தலும் ஆம். அட்டார் - அழித்தார். மருவிப் பிரியாத - கூடியபின் பிரியாத; இறைவன் உயிர்களைக் கூடுதல் அவை மெய்யுணர்வு பெற்ற பின்னரே யாகலின், பின்னர்ப் பிரிதல் இலனாயினான். "துறக்கு மாசொலப்படாய் துருத்தியாய்" என்றார் திருஞானசம்பந்த சுவாமிகளும், (தி.2. ப.98. பா.5.) இருவர் - மாலும் அயனும்; இவர்கள் முதலில் செருக்குக்கொண்டு இறைவனைத் தேடி எய்த்துப் பின்பு வழிபட்டு உய்ந்தார்களாகலின் "மலரடிகள் நாடி வணங்கலுற்ற இருவர்க்கு ஒருவராய் நின்றார்" என்று அருளினார். ஒருவர் - ஒப்பற்ற தலைவர்.

10. பொ-ரை: இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானார் கொன்றை மாலையணிந்த சடை தாழப் பிச்சை ஏற்க வல்லவரும், பாம்பினை இடையில் கட்டவல்லவரும், வலக்கையில் மழுப்படை ஒன்றை உடையவரும்,