| விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை | | | விறலழித்து மெய்ந்நரம்பால் கீதங் கேட்டன் | | | றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும் | | | இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 10 |
திருச்சிற்றம்பலம்
தருக்கினால் உயர்ந்த தக்கனுடைய வேள்வியைச் சிதைத்தவரும், கயிலை மலையை எடுத்த அளவில் தனது வெற்றி பற்றி மகிழ்ந்த இராவணனது அவ்வெற்றியை அழித்துப் பின் அவன் தன் உடல் நரம்பால் எழுப்பிய இசையைக் கேட்டு அவற்கு ஒளிவாளைக் கொடுத்தவரும் ஆவார். கு-ரை: அலங்கல் - (கொன்றை) மாலை. 'வலத்தின்கண் உடையார்; கைக்கண் உடையார்' என்க. இனி, 'வலக்கை' என்பது மெலிந்து நின்றது எனலுமாம். விலங்கல் - மலை. உகந்த - மகிழ்ந்த; கயிலையைப் பெயர்த்த அளவில் இராவணனுக்குத் தனது வெற்றிபற்றி ஓர் மகிழ்ச்சி உளதாயிற்று என்க. விறல் - வெற்றி. 'அவ்விறல்' எனச் சுட்டு வருவித்து உரைக்க மெய்ந் நரம்பு - உடம்பில் உள்ள நரம்பு. திருநாவுக்கரசர் புராணம் | | | நாவுக்கு மன்னர்திரு நல்லூரில் நம்பர்பால் | மேவுற்ற திருப்பணிகள் மேவுறநா ளுஞ்செய்து | பாவுற்ற தமிழ்மாலை பலபாடிப் பணிந்தேத்தித் | தேவுற்ற திருத்தொண்டு செய்தொழுகிச் செல்லுநாள். | -தி.12 சேக்கிழார். |
|