90. திருக்கஞ்சனூர் பதிக வரலாறு: சுவாமிகள், மயிலாடுதுறையினின்றும் துருத்தி, வேள்விக் குடி, எதிர்கொள்பாடி முதலான பதி பலவும் வணங்கிக்கொண்டு திருக்கோடிகா செல்பொழுதில் திருக்கஞ்சனூர் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 190.) குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானைக் கஞ்சனூரிற் கண்டு வணங்கிய உவகை மேலீட்டின்கண், அப்பெருமானது பெருமைகள் பலவற்றையும் எடுத்தோதி, அவனை, 'கற்பகம்' என வாழ்த்தி, 'அத்தன்மை யானை நான் கண்ணாரக்கண்டு உய்ந்தேன்' என்று அருளிச் செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 303 | பதிக எண்: 90 |
திருச்சிற்றம்பலம் | 2973. | மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை | | | மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை | | | நாவலனை நரைவிடையொன் றேறு வானை | | | நால்வேதம் ஆறங்க மாயி னானை | | | ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை | | | அயன்திருமா லானானை அனலோன் போற்றுங் | | | காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 1 |
1. பொ-ரை: மூவிலை கொண்ட நல்ல சூலத்தை வலக்கையில் ஏந்தினவனும், சூரியன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுடர்களாகிய கண்ணினனும் அழகிய தோற்றத்தினனும், நாவலனும், வெள்ளிய இடபம் ஒன்றை ஊர்பவனும், வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆயினவனும், பசு தரும் பஞ்சகவ்வியத்தை விரும்பியவனும், தேவர்களுக்குத் தலைவனும், பிரமனும் திருமாலும் ஆனவனும், அக்கினியால் போற்றப்படும் காவலனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல்வரும் பிறப்பை நீங்கினேன்.
|