| 2974. | தலையேந்து கையானை யென்பார்த் தானைச் | | | சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் | | | குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் | | | கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை | | | மலையானை மற்றொப்பா ரில்லா தானை | | | மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் | | | கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 2 |
கு-ரை: மூன்று சுடர்க் கண்ணான் - 'சூரியன், சந்திரன், அக்கினி' என்னும் முச்சுடர்களாகிய கண்களை உடையவன். நாவலன் - புலவன்; என்றது, வேதமும் தமிழும் உரைத்தவனாதல் பற்றி. தருமிக்குப் பொற்கிழி யளித்த வரலாறும் நினைக்கத்தக்கது. நரை - வெண்மை. அயன் திருமால் ஆதல், சுத்தமாயையில் நேரேயும், பிரகிருதி மாயையில் பிறரை அதிட்டித்தும் அவ்வாறு நிற்றலாம். இத்தலம் அக்கினி தேவன் வழிபட்ட தலமாதல் பற்றி, "அனலோன் போற்றும் காவலன்" என்றருளினார்; இங்கு இறைவர், 'அக்கினீச்சுரர்' எனவும், தீர்த்தம், 'அக்கினி தீர்த்தம்' என்றும் சொல்லப்படுதல் அறியத்தக்கது. "ஆண்ட" என்றது, 'ஆட்சியாகக்கொண்ட" என்னும் பொருளது. 2. பொ-ரை: பிரமகபாலத்தை ஏந்திய கையினனும், எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தவனும், பிரமவிட்டுணுக்களுடைய எலும்புக்கூடுகளைத் தாங்கும் தோளினனும், வெண்ணீற்றுப் பூச்சினனும், கொத்தாய்ப் பொருந்திய நறிய கொன்றை மலர்களை முடிமேல் கொண்டவனும், கொடுமை வல்ல நாகத்தை உடை மேல் கட்டியவனும், மேன்மை மிக்க கயிலை மலையவனும், தனக்குவமை யில்லாதவனும், சந்திரனும், சூரியனும் தேவர்களும் திருமாலும் போற்றும் உருவத்திருமேனி உடையவனும், கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும்பிறப்பை நீங்கினேன். கு-ரை: தலை - பிரமகபாலம். என்பு ஆர்த்தான் - எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தான். 'சவம்' என்றது, பிரமவிட்டுணுக்களது எலும்புக் கூட்டினை; 'கங்காளம்' எனப்படுவன இவையே. இவை, அவ்விருவரும் சேர இறக்க வரும் நாளில் ஏற்கப்படுவன,
|