| 2975. | தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச் | | | சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத் | | | தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச் | | | செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப் | | | பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம் | | | பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட | | | கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 3 |
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. | | (தி.8 திருவா. திருச்சா. 11.) |
என்றருளிச் செய்ததும் இவைகளையே என்க. குலையேறு - கொத்தாய்ப் பொருந்திய. குலம் - மேன்மை. கலையான் - உருவத் திருமேனியை உடையவன். 3. பொ-ரை: தொண்டர்கூட்டமாய்த் திரண்டு தொழுது புகழ அவர்க்கு அருள்செய்பவனும், ஒளிரும் மழுவாயுதத்தை உடையவனும், சுழியையுடையதும், தெளிந்த திரைகளால் மோதி இழிவதும் ஆகிய ஆகாய கங்கையைத் தாங்கிய சடையினனும், செவ்வானம் போன்ற ஒளியினனும், தன்னை அடையாமல் பண்டு அமரர்கள் கூடி ஆராய்ந்து மேற்கொண்டு விரும்பிச் செய்த தக்கனுடைய வேள்வி முழுதும் பாழ் செய்து தக்கனையும் எச்சனையும் தலையறுத்துச் சூரியனைப் பல்தகர்த்துப் பகனைக் கண் பறித்துக் கொண்ட கொடியவனும், கஞ்சனூரை ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன். கு-ரை: "சுழி" என்பது, "கங்கை" என்பதனோடு இயையும், அதனை, வேற்றுமைத் தொகையாக வேனும், வினைத்தொகையாக வேனும் இயைத்து, 'சுழியையுடைய கங்கை' என்றாதல், 'சுழிக்கின்ற கங்கை' என்றாதல் உரைக்க. பொருது - மோதி. "இழிசடை" என்பது, 'புக்க அகம்' என்றல்போல இடப் பெயர்கொண்ட பெயரெச்சமுடிபின் பொருள்மேல் தொக்க இறந்தகால வினைத்தொகை. இனி, 'பழம் உதிர்ந்த கோடு' என்றல்போல, நீங்கற் பொருட்பெயர்கொண்ட பொருண்மைத்தாய வினைத்தொகையாகக்கொண்டு,
|