பக்கம் எண் :

1234
 
2979.நாரணனும் நான்முகனும் அறியா தானை

நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்

பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்

பால்வணனைத் தீவணனைப் பகலா னானை

வார்பொதியும் முலையாளோர் கூறன் தன்னை

மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்

கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

7


2980.வானவனை வலிவலமும் மறைக்காட் டானை

மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை

ஏனவனை இமவான்றன் பேதை யோடும்

இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்


7. பொ-ரை: திருமாலும், நான்முகனும், அறியாதவனும், வேதமந்திர உருவினனும், ஆடவருட்சிறந்தவனும், பூதங்கள் தான் ஏவிய பணிகளைச் செய்ய தான் பிச்சை ஏற்று உண்ணும் பால் நிறத்தவனும், தீ நிறத்தவனும், பகல் ஆனவனும், கச்சணிந்த கொங்கை யாளை உடலின் ஒரு கூற்றாகக் கொண்டவனும், மானை இடக்கையில் ஏந்தியவனும், தேவர்கள் மகிழ்ச்சி நிறைவதற்குக் காரணமானவனாய், கழுத்துக் கருநிறத்தால் மூடப்பட்டவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

கு-ரை: "வேதம்" என்றது, அதன்கண் உள்ள மந்திரங்களை, பாரிடங்கள் - பூதங்கள். பலி - பிச்சை. 'பால் வண்ணம் திருநீற்றாலும், தீவண்ணம் இயல்பினாலும் உடையவன்' என்க. 'மான் இடங்கை உடையன்' என்க; இதனுள், 'இடக்கை' என்பது இடங்கை என மெலிந்து நின்றது; 'இடத்திற் கையில்' என அடுக்காக்கி யுரைத்தலுமாம். மலிவு ஆர்கண்டம் - (தேவர்கள்) மகிழ்ச்சி நிரம்புதற்கு ஏதுவாய மிடறு. கார் பொதியும் - கருமை நிறத்தால் மூடப்பட்ட.

8. பொ-ரை: வானிடத்தவனும், வலிவலமும் மறைக்காடும் உறைபவனும், மதிசூடும் பெருமானும், ஆதி அந்தணனும், மற்றை வருணத்தினனும், இமவான் மகள் பார்வதி யோடும் இனிதிருந்து அருள்செய்யும் பெருமானும், தன்னை ஏத்தி வணங்குவார்க்குத் தேன்