பக்கம் எண் :

1235
 
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத்

தீதிலா மறையோனைத் தேவர் போற்றுங்

கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

8


2981.நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை

நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்

தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானைச்

சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை


போன்று தித்திப்பவனும், தீது இல்லாமல் அவர்களைக் காத்தற் பொருட்டுக் காலம்பார்த்துக் கரந்து நிற்பவனும், தேவராற் போற்றப்படும் வேட்டுவனும் கஞ்சனூராண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

கு-ரை: "வலிவலமும்" என்பதன்பின், 'உடைய' என்பது எஞ்சி நின்றது. "மறையோன்" என்றது, 'முதல் அந்தணன்' என்றவாறு. ஏனவன் - அந்தணனேயன்றிப் பிறவருணத்தவனுமாய் இருப்பவன்; என்றது, யாவரது ஒழுக்கத்தையும் தாங்கி நிற்பவன் என்றதாம். பேதையோடும் இனி திருத்தல் - யாவர்க்கும் அம்மையப்பனாய் வீற்றிருந்து அருள்செய்தல். தேனவன் - தேனாய் இருப்பவன். "தித்திக்கும் பெருமான்" என்றது, தேனவன் என்றதன் கருத்தை இனிது விளங்க அருளிச்செய்தது. மறையவன் - மறைதலை உடையவன்; தோன்றாது கரந்து நிற்பவன்; இக் கரவு. ஏனையோர் கரவு போலப் பிறரை அற்றம் பார்த்துக் கெடுத்தற்குக்கொள்ளும் கரவன்றி, பருவம் நோக்கி அருள் செய்தற்குக் கொள்ளும் கரவு, என்பார் "தீதிலாமறையவனை" என்று அருளிச் செய்தார். கானவன் - வேட்டுவன்; இஃது, அருச்சுனன் பொருட்டுக் கொண்ட கோலம் நோக்கி அருளிச்செய்தது. இப் பேரருள் தேவராலும் போற்றப் படுவது ஆகலின், "தேவர் போற்றும் கானவன்" என்று அருளினார்; வேடனாகி விசயன்முன் சென்ற பொழுது பதினெண் கணங்களும் சூழ்ந்து சென்றன என்னும் வரலாறு ஈண்டு நினைக்கத் தக்கது.

9. பொ-ரை: நெருப்புநிறமுடைய அழகிய திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவனும், நினைப்பவர் நெஞ்சில் நிலைத்து நிற்பவனும், எங்கும் நிறைந்தவனும், முயலகன்மேல் காலை ஊன்றி ஆடியவனும்,