| விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை | | | விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங் | | | கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 9 |
சலந்தரனைப் பிளந்திட்டவனும், ஞானிகள் சிந்தையில் விரும்பி வாழ்பவனும், வேதவிதியானவனும், சிவாகமவிதியாய் விளங்குபவனும், இயல்பாகவே விளங்கும் ஒளியாய், மெய்ப்பொருளாய், மேலோர்கள் போற்றும் கருத்தாய்த் திகழ்பவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன். கு-ரை: 'நெருப்புருவம்போலும் திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவன்' என்க. 'நெருப்புருவு திருமேனி' என்பது பாடம் அன்று. நெஞ்சான் - நெஞ்சின்கண் உள்ளவன். நிறைவு - எங்கும் நிறைந்திருத்தல். முயலகன்மேல் கால்ஊன்றி ஆடியதும், சலந்தராசுரனை அழித்ததும் ஆகிய வரலாறுகளை, கந்தபுராணத்துத் ததீசியுத்தரப் படலத்துட் காண்க. தக்கோர் - தகுதி பெற்றவர்; தகுதி, ஞானம், 'அதனை அடைந்தவரது விருப்பமாய் இருப்பவன்' என்றது, 'அவர் இறைவனை அன்றிப் பிறிதொரு பொருளையும் விரும்பார்' என்றபடி. "வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்" எனவும், (தி.8 திருவாசகம். உயிருண்ணிப்பத்து - 7.) "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" எனவும், (தி.8 திருவாசகம். திருப்புலம்பல் - 3) "வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" எனவும், (தி.8 திருவாசகம். குழைத்தபத்து - 6.)
|