பக்கம் எண் :

180
 

போனகப் பழவரிசி, இருகலம் மணிப்பருப்பு, நான்குநிறை சர்க்கரை, நூறு தேங்காய், இருநூறு வழுதிலைக்காய் இவைகளைக் கொண்டு வந்து, இக் கோயிலிலுள்ள குலோத்துங்கசோழன் திருமடைப்பள்ளியில் சேர்ப்பதற்கு மூலதனமாக பெரும்பற்றப்புலியூர் கீழ்ப்பிடாகை கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச் சேரியான சோழநல்லூர்ப்பால் சோழபாண்டியன் என்ற பெயருள்ள நிலத்தையும், அங்குள்ள கொல்லைக் குளத்தில் செம்பாதி நிலத்தையும் அளித்திருந்தான். திருக்காமக்கோட்டமுடைய பெரியநாய்ச்சியார்க்கு 'ஐப்பசிப் பூர விழா' நடைபெற்றுவந்தது. அதன் செலவினங்களுக்குப் 'பூரப்பேட்டை' என்னும் ஊர் கொடுக்கப்பெற்றிருந்தது.

சில சிறப்பு நாள்கள்:

நாயகர் குலோத்துங்கசோழன் திருத்தோப்புக்கு எழுந்தருளி திருமஞ்சனம்பண்ணி அருளுதலும், திவசங்களுக்குப் பிள்ளையார் சிவபாதசேகரன் சித்தத்துணைப்பெருமாள் எதிரிலிசோழன் திருநந்தவனத்திற்குத் திருப்பாலிகை வலஞ்செய்ய எழுந்தருளுதலும் உண்டு. (திவசம் - சிரார்த்தம்)

திருமூலத்தானத்தானமுடையாரையும்,
அங்குத் தென்பால் எழுந்தருளியிருக்கும்
தட்சிணாமூர்த்தியையும் பற்றிய கல்வெட்டுக் குறிப்பு:

திருமூலத்தானமுடையார்க்கு மூன்று சந்திகளிலும் முறையே வெண்போனகம், பருப்புப்போனகம், அப்பம் இவைகள் அமுது செய்விக்கப்பெற்றுவந்தன. இம் முறையே தட்சிணாமூர்த்திக்கும் அமுது செய்விக்கப்பெற்றுவந்தது. இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் தட்சிணாமூர்த்திக்கு முன் அமுது செய்தருளிவந்த சந்தி மூன்றும், நீக்கி, ஏற்றமாகப் பால்போனகம், அப்பம், வெச்சமுதுப் பயிறு, இளநீர், பால் இவைகள் அமுதுசெய்விக்கப்பெற்றுவந்தன. இவற்றின் பொருட்டு இராஜாதிராஜவளநாட்டுத் திருவிந்தளூர்நாட்டு வடசேமங்கலத்தில் நில நிவந்தம் விடப்பட்டிருந்தது.


இரண்டாம் பிராகாரத்திலிருந்து மூன்றாம் பிராகாரத்திற்குப் போகும்மேற்குத்

திருவாயிலின் பெயர்:

இம்மேற்குத் திருவாயிலுக்கு அகளங்கன் திருவாசல் என்று பெயர். "இப்படிக்கு அகளங்க திருவாசலில் புகுவாயில் புறவாயில் கல்வெட்டவும்