பக்கம் எண் :

181
 

பண்ணுவதே. செய்யப்பண்ணுவதே. இவை பாண்டி மண்டலத்து....." என, இவ்வாசலின் தென்பால் உள்ள கல்வெட்டுத் தொடர்களால் இச்செய்தி அறியக்கிடக்கின்றது. இதை உணர்த்தும் கல்வெட்டு அனைத்துலகும் கொண்ட சுந்தரபாண்டிய தேவர் காலத்தது ஆகும்.

இத்திருவாயிலின் அருகாலில் "ஸ்வஸ்தி ஸ்ரீ அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கற்காக இத்திருநிலைக்கல் செய்வித்தான் இவர் முதலிகளில் பெருமாள் பிள்ளையான சோழகோனார்" எனச் செதுக்கப் பெற்றிருப்பதால், இத்திருநிலைக் கல்லைச்செய்துவைத்தவர் கோப்பெருஞ்சிங்க தேவர் என்று தோன்றுகின்றது.

மூன்றாம் பிராகாரத்திலுள்ள மண்டபம், கோயில்
இவைகளைப்பற்றிய குறிப்புக்கள்:

இம்மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் நூற்றூக்கால் மண்டபத்தில் உள்ள பல தூண்களில் "விக்கிரமசோழன்" என்றும், மற்றொரு தூணில் 'விக்கிரமசோழன் திருமண்டபம்' என்றும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இம்மண்டபம் மணவில் கூத்தனான காலிங்கராயனால் இவ்வரசன் பெயரால் கட்டப்பெற்றதாகும்.

இம்மண்டபத்தின் தென்முகப்பு மண்டபத்திற்கு 'வீர பாண்டியன் திருமண்டபம்' என்று பெயர். இச்செய்தி அங்குப் பொறிக்கப் பெற்றுள்ள 'வீரபாண்டியன் திருமண்டபம்' என்னும் கல்வெட்டுப்பகுதியால் அறியக்கிடக்கின்றது.

திருக்காமக்கோட்டமுடைய பெரியநாய்ச்சியார் கோயில்:

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெரியநாய்ச்சியார், கல்வெட்டுப் பாடல்களில் 'நடங்கவின்கொள் அம்பலத்து நாயகச் செந்தேனின் இடம் கவின்கொள்பச்சை இளந்தேன்' எனவும், "எவ்வுலகும் எவ்வுயிரும் ஈன்றும் எழிலழியாச்செவ்வியாள்' எனவும் பாராட்டப்பெற்றுள்ளனர். இக்கோயிலின் திருச்சுற்றையும், திருச்சுற்று மாளிகையையும் அமைத்தவன் மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவனாகிய கூத்தன் ஆவன்.

இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்துக் கோபுரத்தின் கிழக்கு வாசல் நிலைக்கல், கோப்பெருஞ்சிங்கனால் அமைக்கப் பெற்றதாகும். இதை