பக்கம் எண் :

185
 

திரிபுரசுந்தரிதேவி, சுக்கிரன், வைஜாயன், நாகன், யமுனை, பத்திரகாளி, ஆதிசண்டேஸ்வரர் இவைகளின் திருமேனிகள் இக்கோபுரவாசலுக்கு வடபால், மேற்குப் புறச்சுவரில் இருக்கின்றன. இவைகளின் தலைப்பிலும் மேற்குறித்த பெயர்கள் பொறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் க்ஷேத்திர பாலப்பிள்ளையாரின் முன்பக்கம் சிறுமண்டபமும் கட்டப் பெற்றுள்ளது. க்ஷேத்திர பாலப் பிள்ளையார் என்பவர் வயிரவர் ஆவர். நிருதி, புதன், ஞானசக்தி, அக்நிதேவன் இவர்களின் திருமேனிகளும் இக்கோபுர வாசலின் தென்பால் மேற்குப்புறச்சுவரில் இருக்கின்றன.

மேற்குக் கோபுரத்துக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்:

இக்காலம் இப்பிள்ளையார்க்கு வழங்கும் திருப்பெயர் கற்பகப்பிள்ளையார் ஆயினும், "கோமாற பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகர தேவர்க்கு" எனத்தொடங்கும் மேலக்கோபுர வாசலின் தென்பால் உள்ள கல்வெட்டில், இப்பிள்ளையார் குலோத்துங்கசோழ விநாயகப் பிள்ளையார் என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெற்றுள்ளனர். அக்கல்வெட்டுப் பகுதி பின்வருமாறு:- "இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத் திருமாளிகையில் நிலையெழு கோபுரத்திருவாசல் புறவாசல் தென்பக்கத்து எழுந்தருளியிருந்து பூசைகொள்ளுகிற குலோத்துங்கசோழ விநாயகப் பிள்ளையார்க்குச் சிறுகாலை சந்திக்கும், சுந்தரபாண்டியன் சந்திக்குப் பின்பாக அமுது செய்ய" என்பதாகும்.

தெற்குக் கோபுரத்தின் வடபால் நந்தி மண்டபத்தின்
அடிப்பாகத்தில் இருக்கும் கல்வெட்டு:

இதில் ஆறு பாடல்கள் இருக்கின்றன. இவைகள் பனசையூர்த் தலைவனாகிய மணியன் வல்லையன் ஆதித்தன் பாண்டியர்களின் சார்பில் சோழர்களோடு சிதம்பரத்தில் புரிந்த போரைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. இப்பாடல்களை ஆக்கியோர் புவனேக வீரத் தொண்டைமானாகிய தாய்நல்ல பெருமாள் முனையதரையர் என்னும் தமிழ்ப்புலவர் ஆவர்.

கிழக்குக் கோபுரத்தின் மேல்பாலுள்ள நந்தி மண்டபத்தின்
அடிப்பாகத்தில் உள்ள கல்வெட்டு:

இம்மண்டபத்தைக் கட்டியவர் செகதீசுவரன் இராசசூரிய