திருமுறை | பதிகம் | பாடல் | 4 | 12 | 1 - 10 | 4 | 97 | 1 - 10 | 5 | 29 | 1 - 10 | 5 | 40 | 1 - 10 | 5 | 45 | 1 - 10 | 5 | 53 | 1 - 12 | 6 | 9 | 1 - 10 | 6 | 13 | 1 - 10 | 5 | 7 | 6 - 8 | 5 | 46 | 1 - 5 | 5 | 64 | 0 - 6 | 5 | 66 | 0 - 9 | 5 | 88 | 4 - 9 | 6 | 25 | 0 - 7 | 6 | 35 | 3 - 7 | 6 | 45 | 1 - 4-8 | 6 | 58 | 3 - 7 - 0 |
முழுப்பதிகங்களாக ஒன்பதும் ஏனைய பாடற்பகுதிகளும் அகத்துறை விளக்கமாக அமைந்து இவற்றுள் அழகு செய்கின்றன. தலைவியின் காதல் நிலைகண்டு இரங்கிக்கூறும் தாய் அல்லது தோழியின் கூற்று, தலைவி கூற்று, ஆகிய இரண்டு துறைகளிலேயே இவ்வகைச் செய்திகள் அமைந்துள்ளன.இவை நயம் பொருந்தியன வாயும், காதல் உணர்வைக் கடவுள் உணர்வாக மாற்றித்தரும் மாண்பினவாயும் அமைந்துள்ளன. தமிழின் மாட்டுத் தண்ணளி: அப்பரடிகள் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கூர்ந் துணர்ந்து தேர்ந்த பழுத்த தமிழ்ப் புலவர் ஆதலின் இம்மொழிச் சிறப்பை இனிது உணர்ந்து அதனைப் பன்முறையும் எடுத்து ஓதுவதிற் பெருமை கொள்கின்றார். 'பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலை' (தி.12 திருநாவு - 1290) பயின்றவர் எனவும், 'சிந்தை மலர்ந்தெழும் உணர்வில் செழுங் கலையின் திறங்களெல்லாம்.
|