இவ்வாறு கூறும் அடிகள் சிவபிரானையே ஆரியன் என்றும் தமிழன் என்றும் கூறும் பகுதிகள் அழகுடையவை; தமிழ் ஆகிய மொழி பேசுவோனை - மொழிக்குரியவனைக் குறிக்கும் சீரிய இனப் பெயராகத் 'தமிழன்' என்றசொல் நிற்றல் அறிந்தின்புறத்தக்கது; இவ்வாறு 'மொழிவழி இனம்' என்ற புது மரபினைத் தோற்றுவித்து அப்பரடிகளேமுதன் முதல் - 'தமிழன்' 'ஆரியன்' என்ற பெயர்களை மொழிந்துள்ளார் என்பது அறிஞர் கருத்தாகும். "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலையுறையெம் மண்ணல் கண்டாய்" | (தி.6. ப.23. பா.5) |
"செந்தமிழோ டாரியனைச் சீரி யானை" | (தி.6. ப.46. பா.10) |
இன்று நாம் தமிழர் எனப் பெருமிதத்துடன் பேசுதற்கு அன்றே வித்திட்ட பெருமை அப்பரடிகட்கே உரியதென்பதை நாம் மறந்துவிடலாகாது. இதைப் பின்னும் ஒருமுறை சிந்திப்போம். தமிழ்ப்பண்களும் தாண்டகவேந்தரும்: இலக்கியம் என்பது பண்ணோடு கூடிய கருத்து என்றுகூறுவர் ஆதலின், பாடலுக்குப் பண் எத்துணை இன்றியமையாத தென்பது விளங்கும். எம்மொழியிலும் பாட்டுப் பண்ணொடு குழைந்தே விளங்கி இயங்குவதாகும். நம் தமிழ் நாட்டிலும் பழைய காலந்தொட்டே பண்ணும் வளர்ந்து வந்திருத்தல் நம் இலக்கியங்களால் இனிது துணியப்படும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐம்பெரும் பண்களைச் சங்க நூல்களிற் காணலாம். அப்பண்கள் பலவகைகளை உடையவாயிருந்தன. அவற்றை ஓதி வளர்த்துவந்த கலைஞர் குடும்பம் 'பாணர்' என்ற பெயரால் நிலை பெற்றது.தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக்கருவிகள் என்ற மூவகைப்பட்ட இசைக் கருவிகளில் பண் வளர்த்தனர் பழந்தமிழர். பழந்தமிழ் மரபினை நன்கு உணர்ந்து தெளிந்த அடிகள் வாழ்ந்த காலம் கிறித்துவுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டு என்பர். சமணர்கள் இசைத் தமிழை மறுத்தும் பழித்தும் பிரசாரம் செய்தமையின், மக்கள் இசையைப் புறக்கணித்து வந்த அக்காலத்தேயே
|