தமிழ் இலக்கண இலக்கியப் பெரும்புலவராக விளங்கிய அடிகள் தெய்வத்திருவருளால் சைவம் பரப்ப முற்பட்டார். பண், இசை ஆகியவற்றில் இறைவன் வீற்று இருக்கின்றான் என்று கூறியதுடன், பழந்தமிழ்ப் பண்களிலேயே தம் கருத்தைத் தமிழ் கூறு நல்லுலகெங்கும் பரப்பத் தொடங்கினார். இவ்வாறே திருஞான சம்பந்த சுவாமிகளும் 'நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்' திருத்தொண்டுபுரிந்து சைவம் வளர்த்தார். இறைவன் பண் பொருந்திய பாடல்களை விரும்பிக் கேட்கும் கருணை உடையவன் என்ற கருத்தை,தம் பண் கலந்த பாடல்களாலேயே எடுத்து விளக்கிய அப்பரடிகளின் புதுமைக் குரலைத் தமிழ்ப் பெருமக்கள் கேட்டனர். "பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை" | (தி.5. ப.18. பா.4) |
'பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித் தாகும் அமுது' | (தி.5. ப.44. பா.8) |
'பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி' | (தி.6. ப.5. பா.2) |
என்றெல்லாம் பாடியருளினார். கொல்லி, காந்தாரம் பியந்தைக் காந்தாரம், சாதாரி, பழந்தக்கராகம், பழம்பஞ்சுரம், சீகாமரம், குறிஞ்சி, இந்தளம், காந்தாரபஞ்சமம், ஆகிய பத்துப் பண்களில் அமைந்த பதிகங்களையும், திருநேரிசை, திருவிருத்தம் முதலிய பதிகங்களையும் அடிகள் பாடியிருத்தல் காணலாம். பாட்டுக்கும் பண்ணுக்கும் பருந்துக்கும் நிழலுக்கும் உள்ள தொடர்பு
|