போற்றித் திருத்தாண்டகம்
| ப.தொ. எண்: 268 | பதிக எண்: 55 |
திருச்சிற்றம்பலம் | 2636. | வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி | | | மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி | | | ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி | | | ஓவாத சத்தத் தொலியே போற்றி | | | ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி | | | ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி | | | காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 1 |
குறிப்பு: இத் திருப்பதிகம் போற்றி (வணக்கம்) கூறி அருளியது. இதுபோலும் திருப்பதிகங்கள் வேறும் சில உளவாயினும் அகத்தியர் திரட்டினுள், அருச்சனைக்கு இத் திருப்பதிகமே சிறந்தெடுத்து வைக்கப்பட்டது. அடுத்துவருகின்ற இரு திருப்பதிகங்களும் போற்றித் திருப்பதிகங்களேயாகும். 1. பொ-ரை: விண்ணாகியும் வேறு பூதங்களாகியும் நிலைபெற்றிருப்பவனே! அடியேனை வேற்றிடத்துக்குத் திரும்பிச் செல்லாதபடி அடிமையாகக் கொண்டவனே! இன்ப ஊற்றாகி உயிர் அறிவினுள்ளே நிலைபெற்றிருப்பவனே! இடையறாத சொற்களின் ஒலியே! சக்தியாகி ஐம்பூதங்களிலும் நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் இருப்பவனே! காற்றாகி எங்கும் கலந்தவனே! கயிலை மலையில் உறைபவனே! உனக்கு வணக்கங்கள் பல. கு-ரை: 'போற்றி' என்பதுபற்றி ஐந்தாம் திருப்பதிகக் குறிப்பின் தொடக்கத்தில் சில கூறப்பட்டன. 'வேறு' என்னும் உரிச்சொல் 'வேற்று' எனத் திரிந்து பெயராய் நின்று, வேறாய பொருள்களை யுணர்த்திற்று. "விண்" எனப் பின்னர் வருகின்றமையின், "வேற்றாகி' என்றருளிச் செய்தார்; 'விண்ணாகியும் பிற நான்கு பூதங்களாகியும் நின்றவனே' என்பது பொருள். "நின்றாய்" முதலியன, 'நின்றான்' முதலிய பெயர்கள் விளியேற்றுநின்றனவாம். அவற்றின் பின்னெல்லாம், 'நினக்கு' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. 'என்னை மீளாமே ஆளாக் கொண்டாய்" எனக். ஊற்று, இன்ப ஊற்று. உள்ளே ஒளித்தாய் - 'புறக்கண்ணிற்குப் புலனாகாது உயிரறிவினுள் நின்றவனே' என,
|