| 2637. | பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி | | | பிறவி யறுக்கும் பிரானே போற்றி | | | வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி | | | மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி | | | பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி | | | போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி | | | கச்சாக நாக மசைத்தாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 2 |
சுவேதாசுவதரமும் கூறிற்று. ஓவாத சத்தம் - இடையறாத ஓசை. ஒலி - எழுத்து. எழுத்துக்களைப் புலப்படுத்தும் ஓசை இடையறாது நிகழ்ந்த வழியே பொருள்புலப்படுமாகலின், 'ஓவாத சத்தத்து ஓலியே' என்றருளிசெய்தார். இனி, "சத்தத்து" என்னும் அத்து வேண்டாவழிச் சாரியை எனக்கொண்டு, 'அழியாத சத்தமாகிய ஒலியே (எழுத்தே)' என்றுரைத்தலுமாம். ஓவாமை - அழியாமை. வடமொழியாளர், எழுத்தினை, 'அட்சரம்' (அழிவில்லாதது) என்பர். எழுத்தின் இயல்பு. "ஓசை யொலியெலாம்" என்னும் திருத்தாண்டகக் குறிப்பிற் கூறப்பட்டது. (ப.38 பா.1). ஆற்று - ஆற்றல் (சத்தி); முதனிலைத் தொழிற்பெயர்; அங்கே - விண் முதலிய பூதங்களிலும், உள்ளத்திலும், ஒளியிலும், ஆறங்க நால்வேதங்களிலும் என்க. இது, "நின்றவாறு" முதலியவற்றை விளக்கியருளியது, "காற்றாகி" என்பதில், "ஆகி" என்பது, 'போன்று' எனப் பொருள் தந்தது. இஃது அங்கே அமர்ந்தமையை உவமையின் வைத்து விளக்கியவாறு. 2. பொ-ரை: பேய்களோடு கூத்தாடுதலை உகந்தவனே! பிறவியைப் போக்கும் தலைவனே! உயிர்களைப் பல வகையான பிறப்புக்களில் நிறுத்தி விளையாடுதலில் வல்லவனே! விரும்பி என் உள்ளத்துப் புகுந்தவனே! பொய்யைச் சார்பாகக் கொண்ட முப்புரங்களை அழித்தவனே! என் சிந்தையை விடுத்துப் போகாது இருப்பவனே! பாம்பைக் கச்சாக அணிந்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல. கு-ரை: பிச்சாடல் - பித்தாடல்; வேண்டியவாறே நடித்தல் (பலவகை நடனங்களையும் செய்தல்). உகந்தாய் - விரும்பினவனே. 'பேயோடு பிச்சாடல் உகந்தாய்' என்க. பிச்சாடல் பேயோடு உகந்தமை போல, பிறவியறுத்தலும் சிவ பிரானுக்ககே உரிய சிறப்பியல்பாதல் அறிக. வைச்சு (வைத்து) - உயிர்களைப் பலவகையான பிறப்புக்களில் நிறுத்தி. ஆடல் - அவை
|